அரபிக்குத்துக்கு ஆட்டம்போட்ட அமீர்… யார் கூட தெரியுமா ?
சென்னை : பிக் பாஸ் அமீர் அரபிக்குத்து பாட்டுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டான்ஸ் மாஸ்டரான அமீர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் Vs டான்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ், கிங்ஸ் ஆஃப் டான்ஸ் என்கிற நடன நிகழ்ச்சியில் இவர் கோரியோகிராபராக பணியாற்றியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் கடைசியாய் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் வரை இவர் கோரியோகிராபராக பணியாற்றியிருக்கிறார்.

அமீர்
டான்ஸ் மாஸ்டரான அமீர், சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். 14 வயதில் தனது தாயையும் இழந்துவிட்டதால், உணவு இல்லாமல் ரோட்டில் அலைந்து, பின்பு ஒரு வீட்டில் அடைக்கலம் அடைந்து அவர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டு அவர்களின் குழந்தைகளுக்கே டான்ஸ் மாஸ்டரான கதையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

அமீர்,பாவனி காதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் வந்த அமீர் வந்த நாள் முதல் பாவனியை காதலிப்பதாக கூறிவந்தார். பிக் பாஸ் சீசன் 5 அமீர் , பாவனி காதல் கதை தான் அதிகம் பேசுபொருளாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாவனி 3வது இடத்தையும் அமீர் 4வது இடத்தையும் பிடித்திருந்தனர்.

பொருத்தமான ஜோடி
நிகழ்ச்சியில் இருந்து இருவரும் வெளியே வந்த பின்னரும், பாவனி மற்றும் அமீர் ஆகியோர் சேர்ந்து ஆல்பம் பாடல் வெளியிட்டிருந்தனர். இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். இவர்களது ஜோடிகளை பார்த்து, நெட்டிசன்கள் பொருத்தமான ஜோடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஆல்பம் சாங் மிகப்பெரிய அளவில் வைரலானது.

வெறித்தனமான ஆட்டம்
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடலுக்கு அலைனான உடன் வெறித்தனமாக ஆட்டம் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அமீரை வெகுவாக புகழ்ந்துள்ளனர். இந்த பாடலை பார்த்த பிரியங்கா அமீர் எனக்கும் இப்படி ஆட சொல்லிக்கொடு என்று கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











