முதல் முறையாக.. பிக் பாஸ் வீட்டில்.. புத்தம் புதுமுகங்கள்.. சுவாரசியம் குறையுமா?
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம்,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்பட்டாளத்தை கொண்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பே நடிகர், நடிகைகள், திரைபிரபலங்கள் ஒரு வீட்டில் எப்படி இருக்காங்க, அன்றாடம் அவங்க என்ன செய்றாங்க என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமா இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கும் இதுதான் காரணம்
ஆனால், தொடங்கி உள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் ஐந்தில் இமான் அண்ணாச்சி, பிரியாங்காவை தவிர வேறுயாரும் தெரிந்த முகமாக இல்லாதது ரசிகர்கள் கவலை அடைய செய்துள்ளது.

இந்தியிலும் பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் முதன்முறையாக 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி தொகுத்து வழங்கினார். தற்போது இந்தி பிக் பாஸ் 14 சீசன்களை கடந்து 15 சீசன் தொடங்கி உள்ளது.

பிக் பாஸ் முதல் சீசன்
2006ம் ஆண்டு இந்தியில் தொடங்கிய பிக் பாஸ் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகே தமிழில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பானது. பிக் பாஸ் தமிழ் முதல் சீசனை கமல்ஹஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் சீசனில், சினேகன், வையாபுரி, காஜல், ரைசா, ஓவியா, நமிதா, காயத்ரி, ஆர்த்தி, சக்தி என பெரும்பாலும் தெரிந்த முகங்களாகவே தெரிந்தனர். இதில் ஆரவ் வெற்றி பெற்றார்.

பல தெரிந்த முகங்கள்
இதைத்தொடர்ந்து, இரண்டாவது சீசன் தொடங்கியது, அதிலும், மும்தாஜ், டேனியல் பாலாஜி, ரித்விகா, ஜனனி ஐயர், மகத், பொன்னம்பலம், விஜயலட்சுமி, தாடி பாலாஜி, சென்ட்ராயன்,ஆனந்த் வைத்யநாதன்,ஐஸ்வர்யா தத்தா என தெரிந்த முகங்கள் இருந்தன.

லாஸ்லியா மட்டுமே
பிக் பாஸ் 3வது சீசனிலும், பாத்திமா பாபு, கஸ்தூரி, ரேஷ்மா,சரவணன், ஷெரின், வனிதா விஜயக்குமார், சேரன், லாஸ்லியா, கவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இவர்களில் லாஸ்லியா மட்டுமே நமக்கு அறிமுகம் இல்லாதவராக இருந்தார். மற்ற அனைவரும் தெரிந்த முகங்களாகவே இருந்தனர்.

ஆரி வெற்றி பெற்றார்
4வது சீசனில் ரேகா, ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஆரி, அனிதா சம்ப மற்றும் அர்ச்சனா, ரியோ, ஷிவானி போன்றவர்கள் தெரிந்த முகமாக இருந்தனர். சீசன் 4ல் ஆரி வெற்றி பெற்றார்.

ஏகப்பட்ட ஃபேன்ஸ்
தற்போது கோலாகலமாக ஆரம்பமாகி உள்ள பிக் பாஸ் சீசன் 5ல் தெரிந்த முகம் என்று பார்த்தால் அது இமான் அண்ணாச்சி, பிரியங்கா மட்டுமே. மற்றவர்கள் நாடகங்கள் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்கள் ஆனால், அவ்வளவு தெரிந்த முகமாக தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் எப்போது நடிகர் நடிகர்கள் தான் பிரதானமாக இருப்பவர்கள். இதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால் இந்த முறை நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, நாடகக் கலைஞர் தாமரை செல்வி, கானா பாடகி இசைவாணி, ராப் பாடகி ஐக்கி பெரி, மாடல் அழகிகள் நதியா சாங், அக்ஷரா ரெட்டி, ஸ்ருதி,நடிகர்கள் நிரூப் , சிபி சந்திரன், ராஜு, நடிகை என்று பார்த்தால் பாவனி ரெட்டி மட்டுமே உள்ளார். இதில் இமான் அண்ணாச்சி, பிரியாங்காவை தவிர வேறுயாரும் தெரிந்த முகமாக இல்லாதது ரசிகர்கள் கொஞ்சம் கவலை கொள்ளவைத்துள்ளது. பலரும் பல துறைகளை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், குறிப்பாக யாரும் அவ்வளவு பிரபலம் இல்லை. பிக் பாஸ் இது யுக்தியை கையில் எடுத்துள்ளது பார்க்கலாம். இந்த சீசன் எப்படி இருக்குனு.


Click it and Unblock the Notifications











