பிக் பாஸ் சீசன் 5… இளம் ஜோடியை களமிறக்கும் விஜய் டிவி… யார் அந்த ஜோடி ?

சென்னை : அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி உள்ளது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தமிழில் இப்போது தான் 4 சீசன் முடிந்து. ஆனால் இந்தியில் 14 சீசன்கள் முடிந்துள்ளன.

தமிழில், விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன்5ல் இளம் ஜோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

விஜய் டிவியில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி முதன்முறையாக, 2018 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

பிக்பாஸ் 7 மொழிகளில்

பிக்பாஸ் 7 மொழிகளில்

அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி உள்ளது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இப்போது தான் 5 வது சீசன் துவங்க உள்ளது. ஆனால் இந்தியில் 14 சீசன்கள் முடிந்து விட்டது.

கொரோனாவால் தாமதம்

கொரோனாவால் தாமதம்

வழக்கமாக ஜுலை மாதம் துவங்கப்பட்டு, அக்டோபர் மாதம் இறுதிப் போட்டி நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு, ஜனவரியில் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. ஆனால் சீசன் 5, முந்தைய ஆண்டுகளைப் போலவே ஜுலை மாதத்தில் துவங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

அனைவரும் பிஸி

அனைவரும் பிஸி

ஆனால் இந்த ஆண்டும் கொரோனா பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால் இதுவரை போட்டி துவங்கப்படவில்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே தொடக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் சினிமா வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. சாக்ஷி அகர்வால், மகத், ஐஸ்வர்யா தத், ஸ்நேகன், ஆரி, ரித்விகா, வனிதா விஜயக்குமார், முகின் ராவ், லாஸ்லியா, கவின், என பலரும் பல சினிமாக்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.

இளம் தம்பதிகள்

இளம் தம்பதிகள்

இந்நிலையில், விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில், ஸ்நேகனின் மனைவி கன்னிகா, இதில் பங்கேற்க இருப்பதாகவும், ஸ்நேகன் மற்றும் கன்னிகா ரவிக்கும் இப்போதுதான் திருமணம் நடைபெற்றதால் இவர்கள் இருவரையுமே ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதகாவும் கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

சர்வைவர்

சர்வைவர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீதமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்க உள்ளார். இதில், கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலை, ஜீ தொலைக்காட்சி வெளியிட்டது. இதில், விஜயலட்சுமி, நந்தா, வனிதா விஜயகுமார், கோபிநாத் ரவி, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா, ஜான் விஜய், விதியுலேகா, விஜே பார்வதி, ஷாலு ஷம்மு அனிகா சுரேந்திரன்,சஞ்சனா சிங் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவல் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X