பீனிக்ஸ் பறவை போல நான் அடிக்க அடிக்க வந்து கொண்டே இருப்பேன்… பிக் பாஸ் அபிஷேக்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் 2வது ப்ரோமோவில் அபிஷேக் உருக்கமாக தனது கதையை கூறுகிறார்.
கடந்த வாரம் தொடங்கிய ஒரு கத சொல்லட்டுமா டாஸ்கின் தொடர்ச்சி இந்த வாரமும் தொடர்ந்து, பிக் பாஸ் ரசிகர்களை வெறுப்படையச் செய்துள்ளது.
அபிஷேக் இன்று தனது கதையை கூறவிருப்பதால் ரசிகர்கள் அவரின் கதையை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

தாமரையின் கதை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரோமோ காலையில் வெளியானது. அதில் தாமரை என் பையனை என்கிட்ட காட்டவே இல்லை.. என் பையனை தேடிப் போனேன்.. அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியல.. அவன் இங்கேயே இருந்திக்கிறேன்னு சொல்லிட்டான்.. என் பையனை பார்த்து 4 மாசமாச்சு என்று அழுதபடி கூறுகிறார்.

ஆரம்பம் நல்லாதான் இருந்துச்சு
தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில், அபிஷேக் தான் கடந்து வந்த பாதை குறித்து பேசுகிறார். அதில், கடவுள் மேல நம்பிக்கை இருக்கு என்று கூறுகிறார். அந்த ப்ரோமோவில் ஒரு கட் கொடுத்து என்சைக்ளோபீடியா விற்பதற்குனு சில பேரு வருவாங்க நமக்கு தேவையோ இல்லையோ அதை வாங்க வெச்சிடுவாங்க அந்த மாதிரிதான் கத அவன் ஆரம்பிக்கும் போது இருந்தது என்கிறார் ராஜு.

இதுதான் நான்
அந்த பில்டிங்கில் இருக்கும் ஒவ்வொரு செங்கலிலும் என் அப்பாவின் ரத்தம் இருக்கு, எவனையும் ஏமாத்தி சம்பாதிக்கல. அடிக்க... அடிக்க நான் வந்துக்கிட்டே இருப்பேன் இதுதான் நான்.. புடிச்சி இருக்கோ... புடிக்கலையோ என்று சொல்வது போல இரண்டாவது ப்ரோமோ முடிகிறது. அபிஷேக் தனது வாழ்க்கையை எப்படி கடந்து வந்தார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

பக்கா ப்ளான்
அபிஷேக் பிரியங்காவை அக்கா மாதிரி, அவங்கள எனக்கு பிடிக்கும் என்று சொல்லி ஒரே அடியா பிரியங்காவை கவிழ்த்து விட்டார். அதுவரைக்கும் அபிஷேக்கிற்கு நோஸ் கட் கொடுத்து வந்த பிரியங்கா, அபிஷேக் அக்கானு சொன்னதும் அப்படியே டோட்டலாக மாறிவிட்டார். ஆனால் அபிஷேக் பிரியங்காவை பக்கத்தில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











