என் அம்மா.. போலீஸ்காரர் கிட்ட என்ன அடி வாங்க வச்சாங்க.. கண் கலங்கிய நடியா சாங் !
சென்னை : என் அம்மா போலீஸ்காரங்க கிட்ட என்னை அடிவாங்க விட்டாங்க என்று கண்கலங்கி கூறுகிறார் நடியா சாங்.
மலேசியா மாடலான நடியா சாங்கிற்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
நடியா சாங் டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமானவர்.

கடந்து வந்த பாதை
பிக் பாஸ் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடந்து வந்த பாதை குறித்து டாஸ்க் நடந்து வருகிறது. இதில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறி வருகின்றனர். இதில் கதை சொல்லும் விதம், கதையின் தன்மை குறித்து லைக், டிஸ்லைக் மற்றும் ஹார்ட் கொடுத்து வருகின்றனர்.

கதறிய தாமரை
அபிஷேக் ராஜா தன் அப்பா குறித்து மனம் உருகி பேசினார். அதேபோல் தாமரை என் மகன் என்னை தவறாக புரிந்து கொண்டு என்னிடம் பேசுவது இல்லை என்று கதறி அழுதார்.

நிரூப் உருக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில், காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான யாஷிகா ஆனந்தின் எக்ஸ் பாய் ஃபிரண்ட் தான் நான் என தனது அறிமுகத்தை கொடுத்தார். நான் இந்த இடத்திற்கு வர காரணமே யாஷிகா ஆனந்த் தான் என்றும் மீடியாவில் தனக்கு யாரையும் தெரியாது என்றும் இந்த நிலைமைக்கு என்னை கொண்டு வந்து நிறுத்தியது அவள் தான் என்றும் யாஷிகா பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நிரூப்.

அடிவாங்க விட்டாங்க
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் மாலேசிய மாடல் அழகி நடியா சாங் பேசியுள்ளார். அதில் அம்மாவுக்கு சாரி சொல்கிறார். போலீஸ்காரங்க கிட்ட என்னை அடிவாங்க விட்டப்போ என் அம்மா மேல ரொம்ப வெறுப்பு வந்துச்சு என்கிறார்.

எப்போதும் வேலைதான்
என் வாழ்க்கை புல்லா வேலை வேலைனுதான் இருந்து இருக்கேன். என் டீன் ஏஜ் வயச அனுபவித்தது இல்லை, காலேஜ் வாழ்க்கையை அனுபவித்தது இல்லை என்று கண்கலங்கினார். என் வாழ்க்கையில் மனிதர்கள் கொடுக்காத அங்கீகாரத்தை எனக்கு ஒரு ஆப் கொடுத்தது என்கிறார். நடியா பிக் பாஸ் போட்டிக்கு வரும் போது, நான் 14வது வயதிலிருந்து வேலை செய்கிறேன். என்னுடைய பில்லரே எனது கணவர் தான் என்று பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











