பிக் பாஸ் 15வது நாள்.. பாவனியை பழிதீர்த்த ஹவுஸ்மேட்ஸ்.. நடந்தது என்ன ?
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா சாங் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து,வாரத்தின் முதல் நாளான நேற்று பிக் பாஸ் வீடு மிகவும் சுறுசுறுப்புடன் காணப்பட்டது. 15வது நாளான நேற்று வீட்டில் என்ன நடந்தது பார்க்கலாமா.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் வீட்டில் நேற்று திங்கட்கிழமை என்பதால் தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இதில், பிக் பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக அழைப்பு மணி ஒலித்ததும் தாமதமின்றி வந்த போட்டியாளர்கள் இந்த வாரத்தின் தலைவர் பதவிக்கு போட்டி போடுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.

தலைவர் பதவிக்கு
அதன்படி இசைவாணி, பாவனி, ராஜு, சிபி ஆகியோர் இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டி இட்டனர். அதேபோல, கூட்டத்தில் ஜொலித்தவரான இமான் அண்ணாச்சி உட்பட 5 பேர் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டி இட்டனர்.

என்ன பீலிங்
தலைவர் பதவிக்கு நடைபெற்ற என்ன பீலிங் என்ற டாஸ்கில், போட்டியாளர்கள் தங்களது எந்த உணர்வையும் காட்டாமல் இறுதி வரை இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவரே தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்தார். இந்த போட்டியில் இமான் முதல் ஆளாக சிரித்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

இசையை சீண்டிய அபிஷேக்
இந்த டாஸ்கில் அபிஷேக் மற்றும் நிரூப் ஆகியோர் பெண்கள் உடையை அணிந்து வந்து ராஜுவை சிரிக்க வைக்க முயற்சி செய்தனர். பின்னர் இசையை சீண்டிய அபிஷேக், சின்னவயதில் இருந்து நீ கஷ்டப்பட்டது எல்லாம் போதாதா? அப்படி கஷ்டப்பட்டு இந்த டாஸ்கில் நீ வெற்றி பெற வேண்டுமா? ஒரு சட்டை வாங்க கூட எப்படியெல்லாம் கஷ்டப்பட்ட என பேசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த இமான், டாஸ்கில் இப்படியெல்லாம் பேச கூடாது, சிரிக்க மட்டும் வையுங்கள் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். வீட்டில் நிஜமாகவே சண்டை ஆரம்பித்துவிட்டது என எண்ணியவர்களுக்கு பல்பு கொடுத்துவிட்டார் இமான் அண்ணாச்சி.

சிபி இந்த வார கேப்டன்
இறுதிவரை பாவனி மற்றும் சிபி, ராஜு தங்களது உணர்வை வெளிப்படுத்தாமல் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, மாலை அணிவித்து வீட்டின் தலைவரை ஹவுஸ்மேட்டுகள் தேர்வு செய்தனர். இதில் சிபி அதிக மாலைகளை பெற்று இந்த வாரத்திற்கான தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பாவனி நாமினேட்
இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது, இதில், முதல் ஆளாக கன்வென்ஷன் ரூமுக்கு சென்ற அக்ஷரா , அபிஷேக் மற்றும் பாவனியை நாமினேட் செய்தார். கடந்த வாரம் நாமினேட் ஆகாத பாவனியை பழிதீர்க்கும் விதமாக 6 பேர் நாமினேட் செய்தனர். அதே போல அபிஷேக்கை 5 பேர் நாமினேட் செய்தனர். இதில், வருண், ராஜு, ஸ்ருதியை யாரும் நாமினேட் செய்யவில்லை.

நான் சொல்லமாட்டேன்
அதையடுத்து, பிரியாங்கா , அபிஷேக், நிரூப் மூவரும் கூட்டாக அமர்ந்து கொண்டு யார் யாரை நாமினேட் பண்ண என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த ராஜுவிடம் நீ யார் பெயரை சொன்ன என்று கேட்கிறார் அபிஷேக், அதற்கு ராஜு நான் அதை சொல்லமாட்டேன் அது ரூல் இல்லை என்கிறார். ஒரு வழியா இந்த வாரத்திற்கான தலைவர் தேர்வு சுமூகமாக முடிந்தது. நாளை என்ன நடக்குதுனு பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











