பிக் பாஸ் 16வது நாள்… பஞ்சதந்திர டாஸ்க்... அம்புட்டும் திருட்டு புள்ளையா இருக்கே… ஒரு ரவுண்டப் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று பஞ்ச தந்திர டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்களை விட பெண்கள் பயங்கரமாக விளையாடினார்கள் என்பதை விட திருடினார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த நாமினேஷன் ப்ராசசில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவனி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

இதனால் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என்ற பரபரப்பும் பதற்றமும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. 16வது நாளான நேற்று வீட்டில் இருந்த அம்புட்டு பயபுள்ளைகளும் திருட்டுபுள்ளையாக போச்சு என்று சொல்லும் அளவுக்கு திருடுனாங்க... எதை திருடுனாங்கனு பார்க்கலாமா...

பிக் பாஸ்

பிக் பாஸ்

16வது நாள் ஆரம்பிக்கும் போதே பிரியங்கா மற்றும் அபிஷேக் நிரூப் மூன்று பேரும், தாமரை சும்மா சோக கதையை சொல்லி சொல்லி பெயர் எடுக்க பார்க்கிறாங்க என்கிறார்கள். சும்மா இதையே சொல்லிட்டு இருக்காதீங்கனு சொல்லிட்டேன் அதிலிருந்து என் கிட்ட அப்படி பேசுவது இல்லை என்கிறார் பிரியங்கா.

பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரம்

இதில் முந்தைய சீசனில் இல்லாத வகையில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பஞ்சதந்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. மதிப்பு மிக்க 5 நாணயங்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தன. அதை திருடி எடுத்து பாதுகாத்துவைக்க வேண்டும், மேலும் ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்படுகிறது.

காப்பாத்துங்க அண்ணாச்சி

காப்பாத்துங்க அண்ணாச்சி

மணி அடித்ததும் விளையாட்டு ஆரம்பமானது, இசைவாணி இமான் அண்ணாச்சியிடம் அண்ணா இந்த ஒருவாரம் மட்டும் என்னை காப்பாத்துங்க என்கிறார். இதையடுத்து, குரூப் குரூப்பாக செயல் பட்டாத்தான் இந்த டாஸ்கில் வெற்றி பெற முடியும் என்கிறார்கள். இதையடுத்து, முதல் நாணயத்தை ஐக்கி எடுத்து பாத்ரூமில் மறைத்து வைக்கிறார். ஐக்கி மறைந்து வைப்பதை தெரிந்து கொண்ட அக்ஷரா அந்த நாணயத்தை திருடி விடுகிறார்.

மறைத்து வைத்த பிரியங்கா

மறைத்து வைத்த பிரியங்கா

மதுமிதாவும் யாரும் பார்க்காத நேரத்தில் நாணயத்தை திருடி விடுகிறார். மதுமிதா திருடிய நாணயத்தை நைசா பேசி அவரிடமிருந்து வாங்கி விடுகிறார் பிரியங்கா, அப்போது அங்கு வரும் அபிஷேக், சமையல் அறையில் வைத்தால் ஆபத்து நீ உன்னுடை பேக்ல வைச்சிக்கோ என்கிறார் இதையடுத்து, குள்ள நரியாக மாறிய பிரியங்கா துணியில் அந்த நாணயத்தை மறைத்து வைக்கிறார்.

அழும் தாமரை

அழும் தாமரை

அபிஷேக், பிரியங்கா மற்றும் ராஜு 3 பேரும் நாணயம் கிடைத்தால் தாமரைக்கு தருவதாக கூறுகின்றனர். தாமரையிடம் பேசும் அபிஷேக் உங்களுக்காக தான் நாங்கள் இதனை செய்கிறோம் அமைதியா இருங்க என்கிறார். இதனால், தாமரை அவரின் காலில் விழுந்து நீ சொன்னதே போதும் என்று அழுகிறார்.

வசமா மாட்டிய நிரூப்

வசமா மாட்டிய நிரூப்

கார்டன் ஏரியாவில் பாவனி இரு நாணயத்தை மறைத்து வைக்கிறார். இதை தெரிந்து கொண்ட நிரூப் அந்த இரண்டு நாணயத்தையும் எடுத்து விடுகிறார். நிரூப் எடுக்கும் போது அபினய் அதை பார்த்துவிடுகிறார் இதனால் வீட்டில் சலசலப்பு ஏற்படுகிறது. எடுக்கும் போது பார்த்தால் மீண்டும் பாக்ஸில் வைக்க வேண்டும் என்று மற்றவர்கள் சண்டை இடுகிறார்கள். ஆனால் நிரூப் ஒத்துக்கொள்ளாமல் பிக் பாஸ்கிடம் இரண்டு நாணயம் இருப்பதாக கூறுகிறார்

பாதாள சிறையில்

பாதாள சிறையில்

நிரூப் நாணயங்களை எடுக்கும் போது அபினய்யிடம் பிடிபட்ட காரணத்தினால், பிக் பாஸால் பாதாள சிறைக்கு அனுப்படுகிறார். அவரிடம் இருக்கும் நாணயத்தை வாங்கி பெட்டியில் வைக்குமாறும், பிக் பாஸ் அறிவிக்கிறார். அடுத்த அறிவிப்பு வரும் வரை நிரூப் சிறையில் இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். இதையடுத்து,பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பஞ்ச தந்திர டாஸ்க் நடைபெறுகிறது. தூங்காமல் நாணயத்தை யார் சொந்தமாக்குகிறார்கள் என்பதை நாளை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X