பிக் பாஸ் 22வது நாள்: போட்டி போட்டு பிரியங்காவை நாமினேட் செய்த போட்டியாளர்கள்.. ஒரு குட்டி ரவுண்டப்!

சென்னை : பிக் பாஸ் வீட்டின் 22வது நாளான நேற்று நாமினேஷன் ப்ராசஸ் மற்றும் கேப்டன் தேர்வு நடந்தாலும் வீடு ரொம்ப அமைதியாவே இருந்தது.

புயலுக்கு பின் வரும் அமைதிப் போல அபிஷேக் வெளியேறியதால் வந்த அமைதியா இருக்குமோனு கேட்கத் தோன்றுகிறது.

பிக் பாஸ் வீட்டில் நேற்று என்ன... என்ன நடந்தனு பார்க்கலாமா...

பிக் பாஸ் 22வது நாள்

பிக் பாஸ் 22வது நாள்

பிக் பாஸ் வீட்டின் 22வது நாளான நேற்று வேக் அப் பாடலாக நெருப்பு கூத்தடிக்குது காத்து கூத்தடிக்குது பாடலை போட்டு, பஞ்சபூதத்தின் ஆளுமை இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து நெருப்பு காயினை வைத்திருக்கும் இசைவாணிக்கு சிக்சன் ஏரியாவில் புல் பவர் கொடுக்கப்பட்டது.

இசைவாணிக்கு பவர்

இசைவாணிக்கு பவர்

கிச்சன்க்குள் யார் வரலாம், கிச்சன்க்குள் யார் வரக்கூடாது, யார் என்ன சாப்பிடலாம், யார் சாப்பிடக் கூடாது என்பதை அவர்தான் முடிவு செய்யலாம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கிச்சன் ஏரியாவுக்குள் தனது ஆற்றலை காட்டி வரும் இசைவாணி, தாமரைச்செல்வியிடம் ஏன் இவ்வளவு எண்ணையை எடுத்தீங்க.... இனிமே எண்ணையை யாரும் எடுக்கக்கூடாது என்று கன்டிஷன் போட்டார்.

கேப்டனுக்கான டாஸ்க்

கேப்டனுக்கான டாஸ்க்

நேற்று திங்கட்கிழமை என்பதால், கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இதில், நேமிங் கேம் டாஸ்க் கொடுக்கப்பட்டது இதில் ஹவுஸ்மெட்டுகள் அனைவரும் ஒருவர் ஒருவரான ஒரு நபரின் பெயரை அவரின் முகத்தை பார்த்து கூற வேண்டும். யார் ஒருவர் இரண்டுமுறை ஒரே பெயரை கூறினாலும், பெயரை மாற்றிக்கூறினாலும் அவர் விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

மதுமிதா கேப்டன்

மதுமிதா கேப்டன்

இந்த டாஸ்கின் ஆரம்பத்தில் சின்னப்பொண்ணு அவுட் ஆகி வெளியேறினார். இதில் இறுதி வரை அவுட் ஆகாமல் மதுமிதா மற்றும் பிரியங்கா இருந்தனர். இதையடுத்து, இதில் யார் கேப்டன் ஆக வேண்டும் என விரும்புகிறார்களோ அவர் மீது ஸ்மைலி பால்களை வீச வேண்டும். அதை பிரியங்கா மற்றும் மதுமிதா கையில் இருக்கும் வலையில் பிடிக்க வேண்டும். முடிவில் யார் அதிகமான பந்துகளை வைத்திருக்கிறார்களோ அவர்ளே இந்த வார தலைவர் என கூறப்பட்டது. அதில் அதிகமான பந்துகளை வைத்திருந்த மதுமிதா இந்த வார கேப்டனானார்.

சேர்ந்து சாப்பிடலாம்

சேர்ந்து சாப்பிடலாம்

கேப்டனாக மதுமிதா டீம்களை பிரிந்தார்... யாரும் பகலில் தூங்காதீங்க என்றார். மேலும், அனைவரும் சேர்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது பிடித்து இருந்தால் செய்யலாம் என்றார். இதனை ஹவுஸ்மெட்கள் கைதட்டி வரவேற்றனர்.

குஸ்தி விளையாட்டு

குஸ்தி விளையாட்டு

இதையடுத்து, நிரூப் மற்றும் ராஜு இருவரும் குஸ்தி போட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். இதில், நிரூப் ராஜுவின் மீது விழுந்து அவரை அப்படியே நசுக்கிவிட்டார். இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். இதையடுத்து, பெண்கள் டீமில் தாமரை மற்றும் பிரியங்கா விளையாடினர்.. தாமரை பிரியங்காவை அப்படியே ஒரு உருட்டு உருட்டினார் இதனால் பயந்து போன பிரியங்கா ஆத்தாடி என்னால முடியது பா.. எனக்கு பதில் ஐக்கி விளையாடுவார் என்றார். இதையடுத்து ஐக்கி விளையாட வந்தார் அப்போது தாமரை அவரின் தலைமுடியை பிடித்த ஒரு ஆட்டு ஆட்டினார் இதனால் ஐக்கி பயந்து ஓடினார். அப்போது குறுக்கிட்ட ராஜு, தாமரைக்கு ரெட் காட்டி என்றார். இந்த குஸ்தி விளையாட்டு நல்லத்தான் இருந்தது.

நாமினேஷன்

நாமினேஷன்

பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. வழக்கமாக கன்ஃபெஷன் ரூம்மில் நடைபெறும் நாமினேஷன் இந்த வாரம் ஆக்டிவிட்டி ஏரியாவில் நடைபெற்றது. இதில் அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் நாமினேஷன் செய்யப்படும் நபர்களின் பெயரை போட்டு எரிக்க வேண்டும்

9 பேர் நாமினேஷன்

9 பேர் நாமினேஷன்

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் தொடர வேண்டாம் என்று நினைக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். இதில் இந்த வாரமும் சின்னப்பொண்ணு, பாவனி, அக்ஷரா ரெட்டி, இசைவாணி, ஸ்ருதி, அபினய், இமான் அண்ணாச்சி, வருண், பிரியங்கா என 9 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர்.

முன்வரவில்லை

முன்வரவில்லை

நாமினேஷன் லிஸ்ட்டை அறிவித்த பிக்பாஸ் பஞ்ச தந்திர காயின்களை வைத்துள்ள பாவனி, வருண், இசைவாணி ஆகியோரை அந்த காயின்களை பயன்படுத்தி தங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது நாமினேட் செய்யலாம் என்ற சலுகையை கொடுத்தார். ஆனால் அவர்கள் மூன்று பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்த முன்வரவில்லை. இப்படியாக நேற்றைய பொழுதுபோனது பிக்பாஸ் வீட்டில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X