பிக் பாஸ் 23வது நாள் : முகத்தை பாவமா வச்சுக்கிட்டு… பவானி பண்ற அட்டகாசம் இருக்கே !

சென்னை : பிக் பாஸ் வீட்டின் 23வது நாளான நேற்று பிரச்சினையுடனே காலை பொழுது விடிந்தது.

உடை மாற்றும் அறையில் தாமரையின் காயினை ஸ்ருதி திருடியதால் வீட்டில் ஒரே களேபரம் வெடித்தது.

போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து சமாதானப்படுத்தியும் பிரச்சினை தீர்ந்ததாக தெரியவில்லை..... நேற்றைய எபிசோடில் ஸ்ருதி, பாவனி ஒரு பக்கம் அழுகை, காயினை பறிகொடுத்த தாமரை ஒரு பக்கம் அழுகை என, பிக் பாஸ் வீடு தண்ணீரில் தத்தளித்து, நேற்றைய எபிசோடு அழுகாச்சி எபிசோடா போச்சு அதை பற்றி பார்க்கலாமா..

தாமரையை ஏமாற்றிய பவானி

தாமரையை ஏமாற்றிய பவானி

பாத்ரூம் ஏரியாவில் பாவனியிடம் தாமரை அக்கா காயின் இருக்கிறது என்று கூறுகிறார் ஸ்ருதி... இதற்கு பாவனி எனக்கு வேண்டாம், நீ எடுத்துக் கொள் என்கிறார். அதற்கு ஓகே என்ற ஸ்ருதி, தாமரையை திசைத் திருப்புமாறு பாவனியிடம் கேட்டுக் கொண்டார். அப்போது தாமரை உடை மாற்றும் அறைக்கு சென்ற பவானி டவலை விரித்து ஸ்ருதி காயினை எடுப்பதை பார்க்காதப்படி மறைத்துள்ளார்.

காயினை திருடிய ஸ்ருதி

காயினை திருடிய ஸ்ருதி

அந்த நேரத்தில் தாமரை உடை மாற்றும் அறைக்கு நைசாக சென்ற ஸ்ருதி, தாமரையின் காயினை ஆட்டையை போட்டுவிடுகிறார். காயினை எடுத்தது ஸ்ருதி என்பதை தெரிந்து கொண்ட தாமரை ஷாலை தாவணிபோல் கட்டிக்கொண்டு...ஏன் பாப்பா என் காயினை எடுத்த, கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே என்றார்.

நீ செய்தது துரோகம்

நீ செய்தது துரோகம்

உடனே ஸ்ருதி, அக்கா நான் தான் சொன்னேனே நீங்க அசந்த நேரத்தில் காயினை எடுப்போனு என்கிறார். அதற்குஇப்படித்தான் விளையாடுவீங்களா... இதுதான் கேம்மா என்று கூறுகிறார். அப்போது பவானி குறுக்கிட்டு பேச, நீ பேசாதே நீ செய்தது துரோகம் என்று எகிறினார் தாமரை. வார்த்தையை விடாதீங்க எனக்கு காயின் பற்றி எதுவுமே தெரியாது என்று அடித்துப் பேசினார் பவானி. ஆனால் ஸ்ருதி தாமரையின் காயினை எடுக்க பவானி தான் உதவினார் என்று அடித்து கூறினார்.

தப்பு தப்புதான்

தப்பு தப்புதான்

சிபி, அபினவ், இமான் அண்ணாச்சி, ஐக்கி ஆகியோர் தாமரைக்கு ஆதரவாக சுருதியிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். அப்போது பவானி, ராஜுவிடம் உங்களிடம் நான் ஏன் விளக்கம் சொல்ல வேண்டும் என விவாதிக்கிறார். ராஜுவும், உடை மாற்றும் இடம் என்பது ஒருவரின் தனிப்பட்ட இடம். அங்கு எதற்கு காயினை எடுக்கிறீர்கள் என்கிறார். தொடர்ந்து ராஜு, அப்படியானால் காயினை எடுக்க வேண்டும் என்பதற்காக நீ உடை மாற்றும் அறைக்குள் நான் வரலாமா என்கிறார். பவானியும் பதிலுக்கு, நீ உடை மாற்றும் அறைக்குள் நான் வந்தேனா என்றார். உடை மாற்றும் அறைக்குள் வருவது தவறு. அங்கு சென்று காயினை எடுப்பது மிகவும் தவறானது என்கிறார் ராஜு.

செம கோவத்தில் தாமரை

செம கோவத்தில் தாமரை

ஸ்ருதி தாமரை இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் போட்டியாளர்கள் ஈடுபடுகிறார். அப்போது ஸ்ருதி தாமரையிடம் பேச வந்தார்... அப்போது தாமரை உன்மேல செம கோவத்தில் இருக்கிறேன் பொய்விடு என்கிறார். உடனே, தாமரையிடம் எகிறிய பவானி, எங்க கேரக்டரை தவறாக காட்டாதீர்கள் நான் ஸ்ருதிக்கு உதவி பண்ணல என்று திரும்ப திரும்ப பொய் சொல்லுகிறார். மொத்தத்தில் ஸ்ருதியும் பவானியும் நேற்றைய ஒரே எபிசோடில் தங்களின் பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டனர்.

விளக்கம் கேட்ட ராஜு

விளக்கம் கேட்ட ராஜு

அப்போது கார்டன் ஏரியாவில் சுருதியிடம், ராஜு விளக்கம் கேட்கிறார்கள். அப்போது ராஜு, உனக்கு அந்த காயின் வேண்டுமா. நீ கேட்டிருந்தால் தாமரையே கொடுத்திருப்பாரே என கேட்கிறார். அதற்கு சுருதி, அப்படி அந்த காயின் எனக்கு தேவையில்லை என்கிறார். அதற்கு ராஜு, அப்படியானால் இப்படி தான் உனக்கு அந்த காயின் வேண்டும் என்கிறார் முகத்தில் அடித்தது போல் பேசினார் ராஜு.

லக்ஜரி பட்ஜெட் டாஸ்க்

லக்ஜரி பட்ஜெட் டாஸ்க்

இதையடுத்து இந்த வாரத்திற்கான லக்ஜரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதில் ஹவுஸ்மெட்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு டீம் நகரத்தாரை போலவும், மற்றொரு அணியினர் கிராமத்தினர் உடையணிந்து கலந்து கொள்ள வேண்டும். நகரத்தார் டீமுக்கு நிரூப்பும், கிராமத்தினர் டீமுக்கு அக்ஷராவும் தலைவர்களாக நியமிக்கப்படுகிறார். நெருப்பு காயினை வைத்திருக்கும் இசைவாணி நடுவராக இருக்க வேண்டும்.

தொகை வழங்கப்படும்

தொகை வழங்கப்படும்

இரு அணியிடமும் பிக்பாஸ் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அந்த தொகையை அன்றாட செலவுகளுக்கு இரு அணியினரும் பயன்படுத்த வேண்டும். போட்டியின் முடிவில் எந்த அணி அதிக தொகையை செலவு செய்யாமல் வைத்திருக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும். இதையடுத்து நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X