Don't Miss!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
முதன் முறையாக பிக் பாஸ் பற்றி மனம் திறந்த ஐக்கி பெர்ரி.. நிரூப் நியாயமா விளையாடுறாரு!
சென்னை : பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆன ஐக்கி பெர்ரி தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
அந்த வீடியோவில் இமான் அண்ணாச்சி,நிரூப், வருண் குறித்து பல சுவாரசியமான கருத்துக்களை கூறியுள்ளார்.
மீண்டும்
ஜெயிலுக்கு
போன
நிரூப்
அன்ட்
வைல்டு
கார்ட்
என்ட்ரி..
கேப்டன்
டாஸ்க்கிற்கு
தேர்வான
3
பேர்!
அந்த வீடியோ இணையத்தில் பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

ராப் பாடகி
பிக் பாஸ் 5 சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்தவர் டாக்டர் ஐக்கி பெர்ரி. மருத்துவம் முடித்த ஐக்கி, இசையை அடையாளமாக மாற்றி கொண்டவர். தஞ்சாவூரைச் சேர்ந்த ஐக்கி, படித்தது வளர்ந்தது எல்லாமே பாண்டிச்சேரியில் தான். சொற்களை மூச்சுவிடாமல் அடுக்கிப் பாடும் ராப் பாடலை தமிழில் பாடி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். ஐக்கிக்கு மற்றொரு பெருமையும் உண்டு. ராப் பாடல்களைத் தமிழில் பாடிய முதல் பெண்ணும் இவர் தான்.

ரொம்ப பிடிக்கும்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் வீடியோ மூலம் பேசி உள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தவர் அண்ணாச்சி தான் அவர், அவருடைய மனசு யாருக்கும் வராது என்றார்.

நியாயமா விளையாடுகிறார்
நிரூப் குறித்து பேசிய ஐக்கி, நிரூப் பற்றி வெளியில் என்ன பேசுறாங்கனு எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரை நிரூப் தந்திரமாக விளையாடுகிறார் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் நியாயமாக தான் விளையாடுகிறார். பொம்மை டாஸ்க்கில் நிரூப் என்னை கைப்பாவையாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டதாக வீட்டில் இருந்தவர்கள் கூறினார்கள். அது உண்மை இல்லை, இருவருமே நியாயமாகத்தான் விளையாடினோம். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று தான் நான் சொன்னேன், நிரூப்பும் அதை ஏற்றுக்கொண்டார் என்றார்.

கோபத்தை காட்டியது இல்லை
வருண் குறித்து பேசிய ஐக்கி, வருண் நன்றாக விளையாடுபவர். அவர் யாரிடமும் தனிப்பட்ட முறையில் கோபத்தை காட்டியது இல்லை, குறிப்பா என்னிடத்தில் அப்படி காட்டியது இல்லை, ஆனால் நிரூப், உடன் விளையாடும்போது மட்டும் அவர் பர்சனலாக விளையாடுகிறார் என்றார்.

பாசக்கார அக்கா
அதேபோல தாமரை குறித்து பேசிய ஐக்கி, வெளியில பாக்குறவங்களுக்கு தாமரை கோவமா பேசுறது தெரியும். ஆனால், உண்மையில் அவங்க பாசக்கார அக்கா நாம எவ்வளவு அன்பு கொடுக்குறோமோ அதை விட அதிகமா அன்பை காட்டுவாங்க நம்ம கிட்ட இருந்தும் அன்பை எதிர்பார்ப்பாங்க என்றார்.