ரொம்ப வாய் பேசுறீங்க… தாமரைக்கு செம நோஸ்கட் கொடுத்த கமல் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 6 வாரங்களை கடந்து தற்போது 7 வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இசைவாணி, அபினய், பாவ்னி, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 9 பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.
இதில் நேற்று பாவ்னி காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல்.

இசை, அண்ணாச்சி
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 48 நாட்களை கடந்துள்ளது. இன்று காலை வெளியான ப்ரோமோவில், இசைவாணியின் கண்ணாடி பிம்பமாக மாறிய இமான் அண்ணாச்சி ஞாயிற்றுக்கிழமை வந்தா நல்லா புரியுது அண்ணாச்சி என்கிறார், செவ்வாய்க்கிழமை வந்தா அப்படியே மாறி விடுகிறார் என்று கூறியுள்ளார்.

2வது ப்ரோமோ
இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில், நான் ஓங்கும் கையாக இருப்பேன்... அவருக்கு 100 பர்சன்ட் என்ற கப்பை கொடுக்க வேண்டும், மற்றொரு ஆளுக்கு சான்ஸே இல்லை என்ற கப்பை கொடுக்கனும் யாருக்கு கொடுப்பீங்க என்று ராஜுவிடம் கேட்கிறார் கமல், 100 பர்சன்ட் கப்பை அண்ணாச்சிக்கும், சான்ஸே இல்லை கப்பை தாமரைச் செல்விக்கும் கொடுக்கிறார் ராஜு.

ரொம்ப வாய் பேசுறீங்க
சான்ஸே இல்லை என்று எதுக்கு கொடுத்த ராஜூ காரணம் சொல்லு என்கிறார் தாமரை, நீ ரொம்ப வாய் பேசுற அதுக்குத்தான் கொடுத்தேன் என்று ராஜூ சொல்ல, இந்த வீட்டில் நான் வாய் பேசனுமாக, பேச கூடாதா சார் என்று கமலிடம் தாமரை கேட்கிறார். இதற்கு கமல் , பேசனும், ஆனால் என்ன வாய் பேசுகிறீர்கள் என்பது தான் முக்கியம் என்று சொல்ல அண்ணாச்சி, இசைவாணி மகிழ்ச்சியில் கையை தட்டுகின்றனர்.

டைட்டில் வின்னரா?
தாமரை இந்த கேம் புரியல என்று சொல்லிக்கொண்டே இருந்தார், ஆனால், இந்த விளையாட்டை புரிந்து விளையாடுவது யாருனா அது தாமரை தான் என்று சொல்லும் அளவுக்கு விளையாடி வருகிறார் தாமரை. போகிற போக்கை பார்த்தா தாமரை தான் டைட்டில் வின்னரா வருவாரோ.


Click it and Unblock the Notifications











