தலைக்கேறிய போதை.. கையில் சரக்குடன்.. சோக பாடலை பாடி புலம்பும் நடிகை!
சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து கலந்து கொண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது, இவர் கையில் சரக்கு பாட்டிலுடன் சோகப்பாடலை போட்டுள்ளார்.
மாடல் அழகியான நமீதா மாரிமுத்து, தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான 'மிஸ் இண்டர்நேஷனல் குயின் - 2022' போட்டியில் கலந்து கொண்டு 'மோஸ்ட் பாப்புலர் வோட்' என்ற விருதினை பெற்றார். அதுமட்டுமில்லாமல், திருநங்கைகளுக்காக நடத்தப்படும் அழகி போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளார். மேலும், இவர் சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் பாடலொன்றும் பாடியிருக்கிறார்.

திடீரென வெளியேறினார்: பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு, கடந்து வந்த பாதையில் தான் வாழ்க்கையில் அனுபவித்த பல கசப்பான விஷயங்களையும், திருநங்கையாக தான் சந்தித்த கொடுமைகளையும் கூறி அனைவரையும் கண்ணீரில் மூழ்க வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இவர் இறுதி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தவிர்க்க முடியாத காரணங்களால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியிட்டதாக மட்டுமே அறிவிக்கப்பட்டது.
காரணம் இதுதான்: ஆனால், அவர் எந்த காரணத்திற்காக அவர் வெளியேறினார் என்பதை விஜய் டிவி சொல்லாததால், இவருக்கும் தாமரை செல்விக்கும் இடையே, ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார் என்றும், கொரோனா தொற்றால் வெளியேற்றப்பட்ட என்றும் பலவிதமான செய்திகள் பரவின. ஆனால் இவர், அளித்த பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் விரதம் இருந்தபோது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினேன் என பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
சோக பாடல்: சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நமீதா, ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார். அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது, கையில் சரக்கு பாட்டிலை வைத்துக்கொண்டு, தனுஷ் நடித்த த்ரி படத்தில் வரும் ஒய் திஸ் கொலைவெறி பாடலில் வரும் 'ஹேண்ட்ல கிளாஸ்.. கிளாஸ்ல ஸ்காட்ச்.. ஐஸ் புல்ல டியரு' என சோக கீதத்தை பாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











