பிக் பாஸ் வீட்டின் இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்… பாவனியை வெச்சி செய்த ஹவுஸ்மெட்ஸ் !

சென்னை : விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், நமீதா வெளியேறியதால் 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதில் கடந்த வாரம் 15 நபர்கள் நாமினேட் ஆகியிருந்த நிலையில் அதில் நாடியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் நடைபெற்றது. இதில் தலைவராக வெற்றி பெற்ற சிபியைத்தவிர மற்றவர்களை நாமிடேட் செய்யுமாறு பிக் பாஸ் கூறினார். இதையடுத்து நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது.

சிபி கேப்டனாக தேர்வு

சிபி கேப்டனாக தேர்வு

பிக் பாஸ் ட்டின் இரண்டாவது தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெறுகிறது. இதில், இசைவாணி, பாவனி, ராஜு, சிபி, இமான் அண்ணாச்சி ஆகியோர் இந்த வாரம் தலைவர் பதவிக்காக போட்டி இட்டனர். என்ன பீலிங் என்ற பெயரில் தொடங்கும் டாஸ்கில் ஒருவரின் உணர்வுகளை தூண்ட வேண்டும் என கூறப்பட்டது. இதில் இறுதிவரை தங்களது உணர்வை வெளிக்காட்டாமல் இருப்பவரே இந்த வாரத்தின் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்தார். இதில் இறுதிவரை உணர்வை வெளிக்காட்டாமல் இருந்த சிபி சந்திரன் இந்த வாரத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

முதல் ஆளாக

முதல் ஆளாக

இதையடுத்து, நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது, இதில், முதல் ஆளாக கன்வென்ஷன் ரூமுக்கு சென்ற அக்ஷரா , அபிஷேக்கை நாமினேட் செய்தார். இதையடுத்து, பாவனி குக்கிங் டீமில் இருக்கும் போது வேறு யாரையும் கிட்டசேர்க்கவே இல்லை அதற்காக அவங்களை நாமினேட் செய்வதாக கூறினார். பாவனி யாருக்கும் க்ரிடிட் கிடைக்கக்கூடாதுனு நினைக்கிறாங்க என்றார்.

சரியாக செயல்படவில்லை

சரியாக செயல்படவில்லை

இதையடுத்து வந்த நிரூப் அக்ஷராவை நாமினேட் செய்தார், அவரால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுவதாக கூறினார். அடுத்ததாக தாமரையை நாமினேட் செய்த நிரூப், அவங்க கடந்த வாரம் தலைவர் பதவியை சரியாக செய்யவில்லை என்று கூறினார்.

நாமினேஷன் ப்ராசஸ்

நாமினேஷன் ப்ராசஸ்

அதேபோல , இமான் அண்ணாச்சி இசைவாணி மற்றும் பாவனியை நாமினேட் செய்தார். பாவனி, அக்ஷரா மற்றும் அபிஷேக்கின் பேரை நாமினேட் செய்தார். பிரியாங்கா, சின்னப்பொண்ணு அக்கா இந்த வீட்டில் இன்னும் முழுமையாக இல்லை என்று கூறி அவரை நாமினேட் செய்தார். அடுத்ததாக ஸ்ருதியை நாமினேட் செய்தார்.

Recommended Video

Mettioli Viji என்னோட மகள் தான் Delhi Kumar Emotional | Latha Rao
பாவனியை நாமிடேட் செய்தனர்

பாவனியை நாமிடேட் செய்தனர்

கடந்த வாரம் நாமினேட் ஆகாத பாவனியை இந்த வாரம் 6 பேர் நாமினேட் செய்திருந்தனர். அதே போல அபிஷேக்கை 5 பேர் நாமினேட் செய்திருந்தனர். இதில், வருண், ராஜு, ஸ்ருதி ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப் பட்டியலில் இடம் பெறவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X