கையில் சரக்கு பாட்டிலுடன் பார்ட்டி..6 மணிக்கு மேல மேடம் இப்படி தானா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான பாவனி கையில் சரக்குடன் இருக்கு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
சின்னத்திரையில் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் பாவனி.
பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

காதல் சர்ச்சை
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாவனி ஷோவுக்குள் நுழைந்ததுமே ஏகத்திற்கும் பிரபலமாகி விட்டார். பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், வந்ததுமே பாவனியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார்.

பிபி ஜோடிகள்
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜூ டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளைத்துப் போட்ட பாவனி. பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீருடன் ஜோடி போட்டு ஆடி இருவரும் வெற்றி பெற்றனர்.

காதலுக்கு பச்சைக்கொடி
அமீரும் பாவனியும் வீட்டில் இருந்தபோதே நெருக்கமாக இருந்தனர். அமீர் பலமுறை தன்னுடைய காதலை வெளிப்படுத்தியபோதும் ஓகே சொல்லாமல் மௌனமாக இருந்த பாவனி, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிறகு காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். இவர்கள் இருவரும் அல்டிமேட் ஸ்டார் அஜித் அடுத்ததாக நடிக்கும் துணிவு படத்தில் நடித்துள்ளனர்.

சரக்கு கிளாசுடன்
பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் சரக்குடன் இருக்கு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மேலும், அந்த வீடியோவில், ஒரு காலத்தில் சரக்கு கிளாசுடன், உண்மையான நண்பர்களாக நாமாக இருந்தோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல், இந்த பழக்கம் வேற இருக்கா என்றும், 6 மணிக்கு மேல மேடம் இப்படி தானா? என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











