கேப்டனாகும் தகுதி உனக்கு இல்லை… அத சொல்ற தகுதி உனக்கு இல்லை.. தாமரை பிரியங்கா மோதல் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் தாமரை மற்றும் பிரியங்காவுக்கு இடையே காரசாரமான சண்டை நடக்கிறது.சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் தாமரை மற்றும் பிரியங்காவுக்கு இடையே காரசாரமான சண்டை நடக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நேற்று இசைவாணி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

2வது ப்ரோமோ

2வது ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், வாய்ப்புனு ஒன்னு வரும் போது தான் நீ, கசப்புகளை சரி செய்யணுமா என்று பிரியங்கா தாமரையை பார்த்து கேட்கிறார். இதற்கு தாமரை என்ன கசப்பு சொல்றீங்க... எதுவா இருந்தாலும் மனதில் பட்டத்தை சொல்லுங்க, கசப்பு... என்ன என்றும், பிரியங்கா நீ தேவை இல்லாததை பேசுற, கசப்பு என்ன அதை சொல்லுங்க என்று காட்டுத்தனமாக கத்துகிறார் தாமரை.

அந்த தகுதி உனக்கு இல்லை

அந்த தகுதி உனக்கு இல்லை

இதற்கு, பிரியங்கா, தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும் தகுதி இப்போ உனக்கு இல்லை என்று கூறுகிறார். இதனால்,கோவத்தின் உச்சத்திற்கு சென்ற தாமரை அதை சொல்லும் தகுதி உனக்கு கிடையாது என்று முகத்தில் அடிப்பது போல சொல்லுகிறார். அடுத்ததாக பிரியங்கா ச்சீ.. ச்சீ என்று கூறிக்கொண்டு மேஜையில் சுத்தம் செய்கிறார். பிரியங்கா உண்மையில் மேஜையை சுத்தம் செய்கிறாரா இல்லை தாமரையை ஜாடை பேசுகிறாரா இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

சமாதானப்படுத்தினார்

சமாதானப்படுத்தினார்

தாமரையும் பிரியங்காவும் அவ்வளவு நெருக்கமாக பழகிக்கொண்டு இருந்தார்கள், போன வாரம் கிச்சனில் நடந்த சண்டையின் போது கூட, தாமரை அழுதப்போது பிரியங்கா கட்டிப்பிடித்துக்கொண்டு, நீ அழுதா எனக்கும் அழுக வரும் ப்ளீஸ் அழாதே என்று தாமரையை கொஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தார்.

சண்டை

சண்டை

அதேபோல தாமரையும் இந்த கேமை சொல்லிக்கொடுத்ததே பிரியங்கா தான் என்று அனைவர் இடத்திலும் பெருமையாக பேசிக்கொண்டு இருந்தார். கமல் முன்னிலையில் கூட அவரின் கையை பிடித்துக்கொண்டு கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதே என்று பிரியங்காவுக்கு அறிவுரை கூறினார். இப்படி ஒற்றுமையாக இருந்த இருவர் இடையே இப்போது தீவிர சண்டை மூண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X