இதோ வந்துருச்சில… பிக் பாஸ் சீசன் 5… ப்ரோமோவே தாறுமாறாக இருக்கே !
சென்னை : பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.
இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் பிக் பாஸ் ப்ரோமோவை ஸ்டார் மா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ஏராளமான ரசிகர்கள்
சின்னத்திரை ரசிகர்கள் அதிகமானவர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் டிஆர்பி.,யை இது வரை எந்த டிவி சீரியலாலும் நெருங்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு உலக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தியில் 14 சீசன்
தமிழ் மட்டுமல்ல இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடத்தப்பட்டாலும் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் மவுசு கொஞ்சமும் குறையவில்லை. இந்தியில் இந்த நிகழ்ச்சி 14 சீசன்களை கடந்து விட்டது. மலையாளத்தில் 3வது சீசன் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது அனுமதி இன்றி செயல்பட்டதாக கூறி ஈவிபி பிலிம் சிட்டிக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் தான் அந்த கிராண்ட் பினாளே நடைபெற்றது. மலையாளத்தில் விரைவில் 4வது சீசன் தொடங்க உள்ளது.

கட்டாய தடுப்பூசி
கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதாகவே தொடங்கியது. அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் 14 நாட்கள் பிரபல ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த முறை பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கட்டாயம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லோகோ மாற்றம்
பிக்பாஸ் சீசன் 5 எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சமயத்தில் சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் லோகோ மாற்றப்பட்டு, வெளியிடப்பட்டது. அத்துடன் பிக்பாஸ் வீட்டின் அமைப்பு, விதிமுறைகள் ஆகியவையும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை மறைமுகமாக உணர்த்தவே பிக்பாஸ் லோகோவில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 5
இதை தொடர்ந்து, பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 8 போட்டியாளர்கள் யார் என்பது தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு பிக்பாஸ் ப்ரோமோ தயாராவது போன்ற ஃபோட்டோக்களும் இணையத்தில் உலா வருகின்றன. அக்டோபர் மாதத்திற்குக் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமதம்
தமிழைப்போலவே தெலுங்கிலும் 4 சீசன்கள் முடிவடைந்து உள்ளன. 5வது சீசன் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமானதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ
இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ப்ரோமோ இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோவை பிக்பாஸ் டீம் வெளியிட்டுள்ளது. அதில் அனைவரும் தூங்கி வழிந்து கொண்டு, சுறுசுறுப்பு இல்லாமல் வீட்டில் போராக அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு, கையில் துப்பாக்கியுடன் நாகார்ஜூன் வந்து போருக்கு சொல்லுங்கு குட்பை வந்துடுச்சி பிக் பாஸூனு சொல்லுகிறார். கலக்கலான நடனத்துடன் வெளியாகி உள்ள இந்த ப்ரோ ரசிர்களை உற்சாகமடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











