என் அக்காதான் என்னை வளர்த்தா… அவதான் என் அம்மா… ஃபீலாகி பேசிய அபிஷேக் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Recommended Video
திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோ, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் கடந்த வாரம் முழுவதும் ஒரு கத சொல்லட்டுமா என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து உணர்ச்சி பொங்க கூறிவருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வட்டி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

ஏமாற்றம் அளிக்கிறது.
இதில், நேற்றைய எபிசோடில் நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறி விட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். இதையடுத்து பேசிய கமல், நமீதா மாரிமுத்து இந்த வீட்டிலிருந்து வெளியேறியது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். அவரின் கதை என்னை மிகவும் காயப்படுத்தியது என்றார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்துள்ளது.

ஃபீல் ஆய்டுவேன்
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் அபிஷோக் ராஜா, இந்த வீட்டில் பிரியங்காவைத்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். அதுக்கு மேல பேசுனா ஃபீல் ஆய்டுவேன். என் அக்காத்தான் என்னை வளர்த்தா, அக்காவை அம்மானுத்தான் சொல்லுவேன். அக்கா திருமணமாகி போனபிறகு என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியல. ஆனால் அதை நான் பெருசா வெளியில் காமிச்சிக்கல என்று தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே பேசினார் அபிஷேக்.

கசின் ஃபீலிங்
இதையடுத்து பேசிய பிரியங்கா, எனக்கு என் மனசு அளவுக்கு, ஏதோ சம் கசின் ஃபீலிங் இருக்கு அவன் மேல என்று கூறி அபிஷேக்கை கட்டி அனைத்துக்கொள்கிறார். ஸோ இன்றைய எபிசோடு கொஞ்சம் கலகலப்பாக போகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











