பிக் பாஸ் ராஜூ மனைவியுடன் வெளிநாட்டு பயணம்.. நயன் - விக்கிக்கே டஃப் கொடுப்பாங்க போல!
சென்னை: பிக் பாஸ் ராஜூ மோகன் தனது மனைவி தாரிகாவுடன் வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் மேற்கொண்டுள்ளார். அந்த போட்டோவை ராஜூ இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ததைத் தொடர்ந்து லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் ராஜூ ஜெயமோகன். இவர் கனா காணும் காலங்கள் இரண்டாம் சீசனில் இவர் நடித்திருந்தார். அதன், விஜய் டிவியில் ஒளிபரப்பான மற்றுமொரு பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நாயகனுக்கு நண்பனாக நடித்திருந்தார். பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நாயகனின் தோழனாகவே நடித்திருந்தார்.

பிக் பாஸ் ராஜூ மோகன்: சின்னத்திரை ரசிகர்களில் மத்தியில் பிரபலம் அடைந்து ராஜூ பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டார். அந்த சீசன் பிக் பாசின் மிகவும் சுவாரசியமான சீசன் எனலாம். இந்த போட்டியில் இவருடையது அமைதியும், நகைச்சுவை திறனும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்த காரணத்தால் பிக் பாஸ் டைட்டில் வின்னரானார் ராஜூ. இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ராஜு வூட்ல பார்ட்டி என்னும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார்.

கதாநாயகனாக அறிமுகம்: அதன் பின் துணை முதல்வர், மனிதன், நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், டான் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார். இதில் டான் படத்தில் எதிர் நாயகனாக தோன்றி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் ராஜூ. தற்போது ராஜூ 'பன் பட்டர் ஜாம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். Rain of Arrows Entertainemt நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராகவ் மிர்தாத் இயக்க உள்ளார். இதில் நடிகர் ராஜூ ஜெயமோகன் ஜோடியாக பவ்யா திரிகா கமிட்டாகி உள்ளார்.

டிராண்டாகும் போட்டோஸ்: இந்நிலையில், நடிகர் ராஜூ தனது மனைவி தாரிகாவுடன் வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தனது காதல் மனைவியை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து விதவிதமாக போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த இணையவாசிகள் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கே டஃப் கொடுப்பாங்க போல என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











