ஜிபி முத்துவை சுற்றி வளைத்த போலீஸ்..என்ன காரணம்..பதறும் நெட்டிசன்கள்

சென்னை : யூடியூபர் ஜிபி முத்துவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள போட்டோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. டிக்டாக் தடை செய்யப்பட்டபோது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஜிபி முத்து யூடியூப்பில் வெளியிட்டு பிரபலமானார்.

வெகுளித்தனமாக இயல்பாக இவர் பேசுவதை ஒரு கூட்டமே ரசித்து ரசித்து பார்த்து வருகிறார்கள். இதனால் குறுகிய காலத்திலேயே அனைவரின் செல்லப்பிள்ளையானார்.

ஜிபி முத்து

ஜிபி முத்து

ஏராளமான ரசிகர்களை கொண்ட ஜிபி முத்து கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், அப்போது அவர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஜிபிமுத்துவும் ஒருவராக வீட்டிற்குள் நுழைந்தார்.

ஜிபி முத்து ஆர்மி

ஜிபி முத்து ஆர்மி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வந்த ஜிபி முத்து, சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக இருந்தார். இவரின் வெகுளித்தனமான பேச்சும், காமெடிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், முதல் வாரத்திலேயே மக்கள் அவருக்கு என்று ஆர்மி உருவாக்கி டிராண்டாக்கினார்கள்.

மகன் தான் முக்கியம்

மகன் தான் முக்கியம்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளராக இவர் இருப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் தனது மகனை பார்க்க வேண்டும் என்று அழுது புலம்பினார். பிக் பாஸ் பல முறை அவரை அழைத்து சமாதானப்படுத்தினார். ஆனாலும், தனது மகனை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இதையடுத்து, கமலும் அவருக்கு அறிவுரை கூறினார். எனக்கு பணம், புகழை விட மகன்தான் முக்கியம் என்று வெளியேறினார்.

கைது செய்த போலீசார்

கைது செய்த போலீசார்

இந்நிலையில், ஜிபி முத்துவை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்து அழைத்துச் செல்வது போன்று வெளியான புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் பதறிப்போனார்கள். சோஷியல் மீடியாவில் ஜிபி முத்து கைது என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியதால் அவரது ரசிகர்கள் புலம்பினார்கள். ஆனால் உண்மையில் இது உண்மையான கைது இல்லை படத்துக்காக புரமோஷன் வீடியோ என்று தெரிந்த பின்பு அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X