ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ.. பிக் பாஸ் ஜனனியின் க்யூட் போட்டோஸ்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஜனனி இன்ஸ்டாவில் அசத்தலான போட்டோவை பார்த்த ரசிகர்கள் கவிதை பாடி வருகின்றனர்.

இலங்கை செய்தி வாசிப்பாளரான ஜனனி,கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இவரின் க்யூட்டான சிரிப்புக்கும், கொஞ்சிப்பேசும் அழகான இலங்கை தமிழிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே இவருக்கு என்று தனி ஆர்மியை ரசிகர்கள் உருவாக்கினார்கள்.

பிக் பாஸ் ஜனனி

பிக் பாஸ் ஜனனி

இலங்கையை சேர்ந்த ஜனனி, மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் துடிப்பாகவே இருந்தார். அதன் பின் இலங்கை சேனலில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஜனனி, ஏராளமான ரசிகர்களை வளைத்துப் போட்டார்.

குட்டி த்ரிஷா

குட்டி த்ரிஷா

ஜனனி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் ரசிகர்கள் ஆர்மிகளை உருவாக்கி தெறிக்கவிட்டனர். அவரின் டிக்டாக் வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கினார்கள். நம்ம டிக்டாக் புகழ் ஜிபிமுத்துக்கு அடுத்து அதிகளவில் ஆர்மி ஜனனிக்குத்தான் உருவானது. த்ரிஷாவின் தீவிர ரசிகையான ஜனனியை அவரது ரசிகர்கள் குட்டி த்ரிஷா என செல்லமாக அனைத்து வருகின்றனர்.

ஜனனியை கண்டித்தார்

ஜனனியை கண்டித்தார்

பிக் பாஸ் வீட்டில், அமுதவாணன், தனலட்சுமி, ஜனனி ஆகியோர் குரூப்பாக சேர்ந்து செயல்பட்டு வந்தார்கள் இது பார்ப்பதற்கு கடுப்பாகவே இருந்தது. நாமினேஷனில் ஒருவரை ஒருவர் கலந்து பேசி தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை நாமினேட் செய்ததை கமல்ஹாசன் சுட்டிக்காட்டி கண்டித்தார். இதையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜனனிக்கு இன்ஸ்டாகிராமில் பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், தினம் தினம் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது இவர் காஷ்மீர் ஆப்பிள் போல சிவப்பு சுடிதாரில் அம்சமாக போஸ்கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆப்பிள் பெண்ணே நீ யாரே என கவிதைபாடி வருகின்றனர்.

லியோ படத்தில்

லியோ படத்தில்

தற்போது ஜனனி லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ, கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் ஆக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X