இரவு பார்ட்டியில் பிக்பாஸ் பிரபலங்கள்..இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை : விஜே மகேஸ்வரி மற்றும் ஷெரினா இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்ததால், டிஆர்பி ரேட்டிங்கில் சிறப்பான இடத்தை பெற முடியாமல் போனதால், இந்த முறை போட்டியாளர்களை கவனத்துடன் தேர்வு செய்துள்ளது.

அதன் படி ஜி.பி.முத்து, அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், ஷிவின் கணேசன், சாந்தி அரவிந்த், முகம்மது அசீம், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ரக்ஷிதா, ஏடிகே, ராம், மகேஸ்வரி, அமுதவாணன், விஜே கதிரவன், குயின்ஸி, மாடல் நிவாசினி, தனலட்சுமி, விக்ரமன், மைனா என 21 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 9ந் தேதி பிக் பாஸ் சீசன் 6 கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் பலரும் தெரிந்த முகமாகவே இருந்தனர். டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததும் அவருக்கு என்று தனி ஆர்மியை ரசிகர்கள் உருவாக்கினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வலுவான போட்டியாளரான அவர் இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மகனை பார்க்க வேண்டும் என்று கூறி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

ஆஸ்கர் நாயகி

ஆஸ்கர் நாயகி

மலையாள நடிகையான ஷெரினா பொம்மை டாஸ்கின் போது தனலட்சுமி தள்ளிவிட்டு கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து மயங்கி விழுந்ததாக கூறி இருந்தார். ஆனால், தனலட்சுமி நான் தள்ளிவிடவில்லை என்று வாக்குவாதம் செய்ததை அடுத்து, குறும்படம் போடப்பட்டது. இதில், ஷெரினாவின் தலையில் அடிபடவே இல்லை என தெரிந்ததால், ரசிகர்கள் ஷெரினாவின் நடிப்புக்கு ஆஸ்கரே தரலாம் என செமயாக கலாய்த்தனர். இதையடுத்து நாமினேஷேனில் சிக்கிய ஷெரினா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

வலுவான போட்டியாளர்

வலுவான போட்டியாளர்

அதன் பிக் பாஸ் வீட்டில் ஸ்ராங்க் பிளேயர் என கருதப்பட்ட விஜே மகேஷ்வரி வெளியேறினார். விஜே மகேஸ்வரி மூன்றாவது வாரத்திலேயே நாமினேஷனில் சிக்கி டேஞ்சர் ஜோனில் இருந்தார். கடைசி நேரத்தில் சாந்தி வெளியேறிய நிலையில் விஜே மகேஸ்வரி காப்பாற்றப்பட்டார். இதனால் மக்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று புலம்பி வந்த மகேஸ்வரி, அதன் பிறகு டாஸ்கில் கவனம் செலுத்தி விளையாடி வலுவான போட்டியாளர் என பெயர் எடுத்தார்.

வருத்தப்பட்ட ரசிகர்கள்

வருத்தப்பட்ட ரசிகர்கள்

இதையடுத்து ஐந்தாவது வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். விஜே மகேஸ்வரி வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது, கதிர், ராம், ராபர்ட் மாஸ்டர் எதுவுமே செய்யாமல் இருந்த போது இவரை வெளியேற்றியது சரியில்லை என பிக் பாஸ் பிரியர்கள் கருத்து தெரித்துள்ளனர்.

இரவு பார்ட்டியில்

இரவு பார்ட்டியில்

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விஜே மகேஸ்வரி மற்றும் ஷெரினா இருவரும் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை மகேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.. மேலும், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக Weekend vibes always crazy என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X