பிக் பாஸ் சீசன் 6: இந்த சீசனோட காமெடி சப்ளையர் இவரு தான்… களமிறங்கிய அமுதவாணன்

சென்னை: விஜய் டிவியின் டிஆர்பி பெருங்கடலான பிக் பாஸ் சீசன் 6 இன்று மாலை தொடங்குகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான அமுதவாணனும் இதில் கலந்துகொள்கிறார்.

வீடு ஒன்னு ஆடு 20

வீடு ஒன்னு ஆடு 20

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 6 இன்று தொடங்குகிறது. கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் கடந்த சில தினங்களாக செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளன. விக்ரம் படத்தில் வரும் "காடுன்னு ஒன்னு இருந்தா" என்ற வசனத்தை உல்டாவாக்கி பிக் பாஸ் சீசன் 6 ப்ரோமோ வெளியாகி மக்களிடம் ரீச் ஆனது. ப்ரோமோவில் வருவதை போலவே பிக் பாஸ் வீடு ஒன்னு தான், அதில் சிக்கியிருக்கும் ஆடுகளின் எண்ணிக்கை தான் இருபது. பத்து பெண் போட்டியாளர்கள் 9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என பெரிய கூட்டணியோடு பிக் பாஸ் சீசன் 6 தொடங்குகிறது.

மிமிக்ரி அமுதவாணன்

மிமிக்ரி அமுதவாணன்

விஜய் டிவி தயாரிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் சேனலில் இருந்தே சில போட்டியாளர்களை களமிறக்குவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் 'கலக்கப் போவது யாரு', 'ஜோடி நம்பர் 1' புகழ் அமுதவாணன் கலந்து கொள்கிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமான அமுதவாணன், பாலா இயக்கிய தாரை தப்பட்டை, பில்லா பாண்டி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். காமெடிக்கு பெயர் போன அமுதவாணன் பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக களமிறங்குவது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

லெஜெண்ட் அண்ணாச்சியாக கலக்கியவர்

லெஜெண்ட் அண்ணாச்சியாக கலக்கியவர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் நடைபெற்ற 'KPY சீசன்ஸ் 3' இறுதிப் போட்டியில், லெஜண்ட் அண்ணாச்சியாக அவதாரம் எடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் அமுதவாணன், "நான் யாருக்கும் போட்டியில்ல, நீங்க பயப்படாதீங்க சிவகார்த்திகேயன்" என அமுதவாணன் பேசியது செம்ம வைரலானது. அதேபோல், அமுதவாணனின் ஃபேவரைட் என்றால் அது மக்கள் நாயகன் ராமராஜன் தான். இப்படி பல வெரைட்டியான ஐட்டம்காரனான அமுதவாணன் பங்கேற்பது பிக் பாஸ் சீசன் 6-ஐ ரகளையாக ரசிக்க வைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆசை நிறைவேறியது

ஆசை நிறைவேறியது

விஜய் டிவியே கதி என இருக்கும் அமுதவாணன் 2020ம் ஆண்டே பிக் பாஸில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது பிக்பாஸ் போட்டிக்காக அழைப்பு வந்ததா என கேட்டதற்கு அமுதவாணன் கூறியதாவது, ''பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள இன்னும் முறையான அழைப்பு வரவில்லை. அப்படி வந்தால், நிச்சயம் சந்தோஷப்படுவேன். நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால், அந்த இடத்தையே வேறமாதிரி மாற்றிக் காட்டுவேன்" எனக் கூறியிருந்தார். இதோ இப்போது அவரின் ஆசை நிறைவேறியுள்ளது, இனி அவர் எப்படி சக போட்டியாளர்களை சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X