எலிமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்த 4 பேர்..வெளியேறப்போவது யார்?..தாக்குப்பிடிப்பாரா தனலட்சுமி?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6, சண்டை,அழகை, சமாதானம் என மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது
பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் என 20 போட்டியாளர்கள் உள்ளனர்.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள், 100 நாட்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து, சண்டை,சச்சரவுகளை மறந்து வீட்டில் இருப்பவர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை அங்கே இருக்கும் கேமிரா மட்டும் இல்லை மக்களும் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.இதில், மக்கள் விரும்பும் போட்டியாளரே டைட்டில் வின்னராக வருவார்.

4 பேர் எலிமினேஷனில்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கப்பட்டு ஒருவாரமாகி உள்ளநிலையில், இந்த வாரம் பிக் பாஸ்வீட்டிலிருந்து யார் வெளியேறப்போகிறார் என்பது ஏறக்குறைய இன்று மாலை அல்லது இரவுக்குள் தகவல் லீக்காகிவிடும். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில், தனலட்சுமி, மகேஷ்வரி, அசீம், ராம் ராமசாமி ஆகியோர் இருக்கின்றனர்.

வெளியேறப்போவது யார்?
கடந்த பிக் பாஸ் சீசன் 5ல் முதல் வாரம் எலிமினேஷன் இல்லாமல், இரண்டாவது வாரத்தில் இருந்து தான் எலிமினேஷன் நடைபெற்றது. ஆனால், இந்த முறை அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஏன் என்றால், பிக் பாஸ் ஆரம்பித்த முதல்வாரத்திலேயே போட்டியில் பல கடுமையான விதிமுறைகள் இருந்தன. இதனால் இந்தவாரம் நிச்சயம் எலிமினேஷன் இருக்கும் என்று கூறுப்படுகிறது. தனலட்சுமி, மகேஷ்வரி, அசீம், ராம் ராமசாமி இந்த 4 பேரில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











