பிக் பாஸ் சீசன் 6: யாரு ஆதாம்… அட்ராசிட்டியை தொடங்கிய ஜிபி முத்து… தலைசுற்றிப் போன கமல்!

சென்னை: விஜய் டிவி தயாரிக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது.

கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் ஆளாக டிக் டாக் புகழ் ஜிபி முத்து என்ட்ரி ஆனார்

பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த சில நிமிடங்களிலேயே கமல்ஹாசனை ஜிபி முத்து அலறவிட்ட சம்பவம் செம்ம வைரலாகி வருகிறது.

 தொடங்கியது பிக் பாஸ் சீசன் 6

தொடங்கியது பிக் பாஸ் சீசன் 6

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 பேட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். 10 ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்கள் 9 பேர், ஒருவர் திருநங்கை என 20 பேர் அடியெடுத்து வைத்தனர். இவர்களில் முதல் ஆளாக டிக் டாக் புகழ் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். அசத்தலான ப்ரோமோவுடன் மேடையேறிய ஜிபி முத்துவுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

 பயந்துநடுங்கிய ஜிபி முத்து

பயந்துநடுங்கிய ஜிபி முத்து

கொரோனா ஊரடங்கின் போது டிக் டாக், இன்ஸ்டா ரீல்ஸ் என சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வந்தார் ஜிபி முத்து. சுத்தமான நெல்லை தமிழில் "ஏலே யாம்லே இப்படி பண்றியோ... பேதிலபோவான்.... அட செத்தப் பயலுவளா... நாரப் பயலுவளா... எல என்னல இது... மெண்டல் பயலுவளா..." என ஜிபி முத்துவின் வீடியோக்கள் மக்களுக்கு பெரிய ஸ்ட்ரஸ் பஸ்டராக அமைந்தது. இந்நிலையில், முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜிபி முத்து, அங்கே தனியாக இருக்க பயந்து நடுங்கினார். யாருமே இல்லாததால் கேமராக்களைப் பார்த்து அவர் கொடுத்த ரியாக்‌ஷன்கள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.

ஜிபி முத்துவை கலாய்த்த கமல்

ஜிபி முத்துவை கலாய்த்த கமல்

ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகும் போதே, வட்டார வழக்கில் பேசி யாரையும் திட்டிவிடக் கூடாது என கடிவாளம் போட்டிருந்தார் கமல். பிக் பாஸ் வீட்டுக்குள் போன ஜிபி முத்து தனியாக இருக்க பயமா இருக்கு சார் என கமலிடம் சொல்ல, அவரோ அதற்கு "எதோ டெக்னிக்கல் ப்ராப்ளமாம், அதனால இன்னும் ஒருநாள்ல அடுத்த ஆள் வருவாங்க. அதுவரை நீங்க மட்டும் தனியா இருங்க" என வேடிக்கை காட்டினார். இதனால் பயந்துபோன ஜிபி முத்து அழாத குறையாக "சார் ப்ளீஸ் சார் என்ன விட்டுடுங்க, இல்லைன்னா யாரையாவது உள்ள அனுப்புங்க" என மன்றாடினார். ஒருகட்டத்தில் கமலையே துணைக்கு உள்ளே வாங்கன்னு கூப்பிட்டு அதகளம் செய்தார்.

தனியா இருக்க மாட்டேன்

தனியா இருக்க மாட்டேன்

அப்போது தனியாக இருந்த ஜிபி முத்துவிடம் பேசிய கமல், "இதுகெல்லாம் போய் பயப்படலாமா... ஏவாள் வரும் வரை ஆதாம் மட்டும் தனியா இருந்த மாதிரி நீங்களும் இருங்கன்னு" சொல்லி முடிக்கவும், பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜிபி முத்து, "யாரு ஆதாமா" என திருப்பிக் கேட்டு கமலையே ஒருநிமிடம் தலைசுற்ற வைத்துவிட்டார். உள்ளே சென்ற ஜிபி முத்துவை கமல் சுமார் 10 நிமிடங்கள் கலாயத்தார்.

யாரு ஆதாம்?

யாரு ஆதாம்?

அதற்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரே நொடியில் கமலை பங்கமாக வச்சு செய்தார் ஜிபி முத்து. இந்த வீடியோவை நெட்டிசன்கள் செம்மையாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், கடவுள் நம்பிக்கை இல்லாத கமலுக்கு ஆதாம், ஏவாள் கதையெல்லாம் கூட நியாபகம் இருக்கா எனவும் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனிடையே முதல் நாளில் இருந்தே தனது அட்ராசிட்டியை தொடங்கிய ஜிபி முத்துவுக்கு, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X