For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வகைதொகையில்லாமல் பெண் போட்டியாளர்களுக்கு நூல் விடும் அசல் கோளாறு… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

  |

  சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஒரு வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

  இந்த சீசனின் பிரபல கானா பாடகர், பாடலாசிரியர் அசல் கோளாறும் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

  பார்ப்பதற்கு விடலை பையனாக இருக்கும் அசல் கோளாறு, பிக் பாஸ் வீட்டில் நிறையவே கோளாறான சம்பவங்களை அரங்கேற்றி வருவது நெட்டிசன்களிடையே எதிர்ப்பை பெற்றுள்ளது.

  எதற்கெடுத்தாலும் விவாதம்… பிக் பாஸ் போட்டியாளர்களால் ஓரங்கட்டப்படும் விக்ரமன்… கமல் அட்வைஸ்!எதற்கெடுத்தாலும் விவாதம்… பிக் பாஸ் போட்டியாளர்களால் ஓரங்கட்டப்படும் விக்ரமன்… கமல் அட்வைஸ்!

  பிக் பாஸில் அசல் கோளாறு

  பிக் பாஸில் அசல் கோளாறு

  பிக் பாஸ் சீசன் 6ல் சீரியல் நடிகர் அஸிம், அமுதவாணன், ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், விக்ரமன், ஆர்யன் தினேஷ், ரக்ஷிதா, ஆயிஷா, ஷிவின், ஜனனி உள்ளிட்ட மேலும் சில போட்டியாளர்களுடன் அசல் கோளாறும் பங்கேற்றுள்ளார். 'ஜோர்த்தாலே' பாடல் மூலம் பிரபலமான அசல் கோளாறு, சந்தோஷ் நாராயணன், யுவன் ஆகியோரின் இசையிலும் பாடல்களை எழுதியுள்ளார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில், 'லைஃப் ஆப் பேச்சுலர்' பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறுவின் அட்ராசிட்டிகள் நெட்டிசன்களை கொதிப்படைய வைத்துள்ளது.

  கடலை… கடலை…

  கடலை… கடலை…

  பார்ப்பதற்கு எப்போதுமே ரஃப் அண்ட் டஃப்பாக இருக்கும் அசல் கோளாறு, சக போட்டியாளர்களையும் கோளாறாக்கி விடுவாரோ என்ற அச்சம் இப்போது ரசிகர்களுக்கு வந்துவிட்டது. முதல் நாளில் ஆயிஷாவுடன் நட்பாக பழக வேண்டும் என விருப்பம் தெரிவித்தவர், "என்ன வாடா போடா என்றெல்லாம்" கூப்பிடக் கூடாதென்று கண்டிஷன் போட்டு ஆயிஷாவை அழவும் வைத்துவிட்டார். அதிலிருந்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே கிடையாது. அதன்பின்னர் குயின்ஸியிடம் வம்பிழுத்துக்கொண்டே இருந்தார் அசல். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் நிவாஷினி, ஆயிஷா, குயின்ஸி என மூன்று பேரிடமும் விடாமல் கடலை வறுத்து வருகிறார்.

  காண்டான பார்வையாளர்கள்

  காண்டான பார்வையாளர்கள்

  இந்நிலையில், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கமலின் பஞ்சாயத்து எபிசோட்கள் நடந்து முடிந்தன. அதில், என்னால் அசலிடம் நட்பாக பழக முடியவில்லை. வாடா போடா என பேசக் கூடாது என்ற அவரது கண்டிஷன் எனக்கு செட்டாகவில்லை என ஆயிஷா ஒரே போடாக போட்டார். அதற்கு கமலும் அவரது அனுபவத்தில் இருந்து பதில் கொடுத்தார். அதேநேரம், விக்ரமனுக்கும் குயின்ஸிக்கும் சின்ன பிரச்சினை எழ, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குயின்ஸியின் அருகே சென்ற அசல், தனது கோளாறான வேலையைக் காட்டத் தொடங்கினார். குயின்ஸியின் கையை நல்லா மாவு பிசைவது போல பிசைந்து பார்வையாளர்களையே முகம் சுழிக்க வைத்தார்.

  நெட்டிசன்கள் ட்ரோல்

  நெட்டிசன்கள் ட்ரோல்

  அதன் பிறகு, குயின்ஸி செட் ஆகவில்லை என்ற முடிவுக்கு வந்த அசல், நீச்சல் குளம் அருகே நிவாஷினி அருகே படுத்துக்கொண்டே கடலை வறுத்து ரசிகரக்ளை காண்டாக்கினார். எனக்கு கேர்ள் ஃபிரெண்டே இல்லை என்று பேசி நிவாஷினிக்கு செம்மையாக நூல் விட்டார். இப்படி மாறி மாறி அசல் கோளாறு ஆர்வக் கோளாறாக செய்த அட்ராசிட்டிகளை, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதில் ஒருவர், "டேய் அசல் என்னடா பண்ற?" என கேள்விக் கேட்டுள்ளார். இன்னொருவர், "நம்ம கோளாறு ஆயிஷா கிட்டயும்" போய்ட்டார் என்றபடி ட்ரோல் செய்துள்ளார். மேலும், நெட்டிசன்கள் பலர் கோளாறுவின் சேட்டைகளை சமூக வலைத்தளங்களில் வரிசைப்படுத்தி வசை பாடி வருகின்றனர்.

  English summary
  Asal Kolaaru is the stage name of Vasantha Kumar, a singer, and lyricist who has recently worked in the movies Bachelor, Gulu Gulu, Mahaan, and Coffee With Kadhal. He is famous for his song Jorthaale which he created in collaboration with afRo. Now he was entered into Bigg Boss house for season 6. In this case, Netizens trolled Asal Kolaaru for taking advantage of female contestants.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X