அக்டோபரில் இல்லை..தாமதமாகும் பிக்பாஸ் சீசன் 6..சோகத்தில் ரசிகர்கள் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Recommended Video

Actor Amitash |சிலை கடத்தல் பற்றிய வித்தியாசமான script -Paramporul | *Interview

தமிழில் கடந்த 2017ம் ஆண்டு இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை தொடங்கும் பணி ஆயத்தமாகி வருகின்றன.

ஆறாவது சீசன் தொடங்கப்போகிறது என்ற தகவல் வெளியானதுமே, சமூக ஊடகங்களிலும் பல போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன.

பிக் பாஸ்

பிக் பாஸ்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி தொடங்கினாலே அடுத்த நூறு நாட்களுக்கு அனைவருக்கும் சுவாரசியத்திற்கு பஞ்சமே இருக்காது. சண்டை,அழகை, காதல், ரொமான்ஸ், நட்பு, பாசம், கேலி, ஆட்டம் பாட்டம் என பல உணர்வுகளை இந்த நிகழ்ச்சியில் நாம் பார்க்க முடியும். பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சிலர் குறை கூறி வந்தாலும், அதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வழக்கம் போல் தகவல்கள் அடிப்படையில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களில் பெயர்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

விஜய் டிவி கொடுத்த சர்ப்ரைஸ்

விஜய் டிவி கொடுத்த சர்ப்ரைஸ்

மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி பிக் பாஸ் தமிழ் 6 இல் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளரான டிடி, இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, நடிகை தர்ஷா குப்தா ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் விஜய்தொலைக்காட்சி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

தாமதமாகுமா?

தாமதமாகுமா?

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவது தாமதமாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வந்தவுடன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படப்பிடிப்பில் கமல் பிஸியாகக் கூடும் என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X