Don't Miss!
- Lifestyle
வரவர செக்ஸில் ஆர்வம் குறையுதா? அப்ப உடம்புல இந்த சத்து குறைவா இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷாரா இருங்க..
- Sports
ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்!
- Technology
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- Finance
அடிமடியில் கைவைத்த கூகுள்.. இனி கிரீன் கார்டு வாங்குவது ரொம்ப கஷ்டம்.. அழுது புலம்பும் ஊழியர்கள்..!
- News
ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை..பதுங்கிய ரவுடிகள்..போன் சிக்னல் மூலம் கொத்தாக பிடிக்க டிஜிபி ஆர்டர்
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பிக் பாஸூக்கு முன்பே வெற்றிபெற பக்காவாக பிளான் போட்ட அசீம்.. புட்டு புட்டு வைத்த சுந்தரவள்ளி !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வெற்றி பெற பக்காவாக பிளான் போட்டுவிட்டுத்தான் அசீம் வீட்டிற்குள் வந்தார் என பேராசிரியர் சுந்தரவள்ளி புட்டு புட்டு வைத்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் 6-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 9ந் தேதி 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர். இதில் வெற்றி பெறப்போவது விக்ரமனா அல்லது அசீமா என்பதை தெரிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
செரீனாவிடம் ஆபாசமாக பேசிய அசீம்...பேரை கெடுக்க சதியா? நடந்தது என்ன?

அசீமின் மாஸ்டர் பிளான்
இந்நிலையில், பேராசிரியர் சுந்தரவள்ளி பேசி உள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், விக்ரமனுக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்ததால் கொந்தளித்து போன வனிதா விஜயகுமாருக்கு, அசீம் என்ன செய்துவிட்டுபோனார் என்று தெரியுமா? என்று சுந்தரவள்ளி தனது பேச்சை தொடங்கினார். அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே பக்காவாக பிளான் போட்டுள்ளார் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

3 மாதத்திற்கு முன்பே
அசீம் 3 மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், தமிழ் நாட்டில் எனக்கு பிடித்த தலைவர் சீமான் என்று பேசி, பொலிட்டிக்கலா ரெடி பண்ணிவிட்டு போனவர் ஆசீம். கடந்த 5 வருடங்களாக நடித்த பிக் பாஸ் சீசனை தெளிவாக பார்த்து பிளான் பண்ணி, ஒரு கட்டம் போட்டு, எப்படி எல்லாம் நடந்து கொண்டால் ஜெயிக்கலாம் என்பதை உள்வாங்கிக்கொண்டு, அப்படி நாம் உள்ளே சென்றால், ஓட்டுபோட ஒரு கூட்டம் வேண்டுமே என அனைத்தையும் செட் பண்ணிவிட்டு போனவர் அசீம்.

இருகட்சிகளின் ஓட்டு
வீட்டிற்குள் போவதற்கு சரியாக 3 மாதத்திற்கு முன்பே, "தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை சீமான் பேச்சு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை புகழ்ந்துள்ளார். அதேபோல, அதே மாதம் உதயநிதியை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். இந்த இரண்டு வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் நாம் தமிழர் ஓட்டு மறுபக்கம் திமுக ஓட்டை வாங்க சரியாக திட்டமிட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் அசீம்.

எல்லாமே பிளான் தான்
அதேபோல, பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சீமான் பேசும் வசனமான "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே" என்று பேசி தன்னை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் போல அடையாளப்படுத்திக் கொண்டார். அதே போல உதயநிதியின் பிறந்த நாளுக்கு வீட்டிலிருந்து வாழ்த்து கூறினார். இதனால், ஃப்ரீஸ் டாஸ்கில் உதயநிதியும் கிருத்திகாவும் வருவார்கள் என்று அசீமின் ஆர்மி இணையத்தில் ஒரு செய்தியை பரப்பி விட்டது.

இது அரசியல் இல்லையா?
ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சி ஓட்டு, மறுபக்கம் திமுக ஓட்டு வந்து குவிவதால் தான், பல முறை அசீம் நாமினேஷனில் சிக்கிய போதும், ரெட் கார்டு கொடுக்கும் சூழ்நிலை வந்த போதும் அசீம் அதிகமான வாக்குகளை பெற்று வெளியேறவில்லை. திருமாவளவன் ஓட்டு கெட்டதை விமர்சனம் செய்யும் வனிதா உண்மை என்பதை தெரிந்து, அடிமுடிவரை ஆராய்ந்து பேச வேண்டும், தனக்கு அரசியல் தெரியாது என்ற சொல்லும் வனிதா, எது அரசியல் என்று தெரியாமல் பேசக்கூடாது என்று பேராசிரியர் சுந்தரவள்ளி பேசினார்.