இதுக்கு மேல முடியாது.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. எச்சரித்த விஜே மகேஸ்வரி!
சென்னை : இதுக்கு மேல பொருத்து போக முடியாது மோசமாக விமர்சனம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜே மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6ன் நிகழ்ச்சியில், 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் விஜே மகேஸ்வரி. இவர் மற்ற போட்டியாளர்கள் போல் இல்லாமல் அனைவர் இடத்திலும் கேள்வி கேட்டார்.
இதனால், பிக் பாஸ் வீட்டில் இவருக்கு சண்டை கோழி என பெயர் வந்தது. வலுவான போட்டியாளராக கருதப்பட்ட விஜே மகேஸ்வரி விரைவாக வெளியேறினார்.

அசீம் வெற்றி பெற்றார்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் பைனலுக்கு போனார்கள். இணையத்தில் அறம் வெல்லும் என்று டிரெண்டான நிலையில், விக்ரமன் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அசீம் டைட்டில் வின்னர் ஆனார்.

மோசமான முன் உதாரணம்
அசீம் வெற்றி பெறுவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவர் டைட்டில் வென்றதை பிக் பாஸ் ரசிகர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சக போட்டியாளரை அவமதித்து, தரக்குறைவாக பேசிய ஒருவரை விஜய் டிவி எப்படி வெற்றி பெற்றவராக அறிவித்து என்று பலர் பல கருத்துக்களை முன் வைத்தனர். இன்னும் சிலர் Boycott Vijaytv என்ற ஹேஷ்டேக்கை டிராண்டாக்கினர்.

விஜய் டிவி தவறு செய்துவிட்டது
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றி பெற்றது ஏற்றுக்கொள்ள முடியாது என்று விஜே மகேஸ்வரி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், பெண்களை மதிக்க தெரியாதவர் அசீம், இப்படிப்பட்ட ஒருவர் நம் வீட்டில் இருந்தால், அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும், அசீமுக்கு டைட்டிலை கொடுத்து விஜய் டிவி பெரிய தவறை செய்துவிட்டது என்று கூறியிருந்தார்.

மோசமான விமர்சனம்
விஜே மகேஸ்வரியின் துணிச்சலான பதிலை விக்ரமன் மற்றும் ஷிவினுடைய ரசிகர்களும் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் வழக்கம் போல மகேஸ்வரியின் செயலை அசீமுடைய ரசிகர்கள் கண்டிபடி திட்டியும் விமர்சித்தும் வருகிறார்கள்.
சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்
இந்நிலையில், விஜே மகேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது மகனை கட்டிபிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, என் மகன் ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி, நச்சு ஆண்கள் நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறாய் என்று நான் நம்புகிறேன். நீ அவ்வாறாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். உன்னை நான் பாதுகாப்பேன் என்று கூறி உள்ள மகேஸ்வரி, மோசமாக விமர்சனம் செய்பவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











