Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நேற்று ராம்...இன்று ஆயிஷா..தப்பித்த ஜனனி..இனிமேல் தான் தரமான சம்பவம் லோடிங்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சீரியல் நடிகை ஆயிஷா தற்போது வெளியேறி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்தவர் ஆயிஷா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பிரபலமானார்.
இவர் நிகழ்ச்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே அசீமும் ஆயிஷாவும் முட்டிக்கொண்டனர். அசீம்,ஆயிஷாவை வாடி....போடி என்றதால் செருப்பை கழட்டி அடிக்க சென்றார்.
திடீரென கண் கலங்கிய கமல்..உறைந்து போன போட்டியாளர்கள்.. என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

கமலிடம் வாய்விட்ட ஆயிஷா
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததுமே, அடிக்கடி உடல்நலம் முடியாமல் அவதிப்பட்ட ஆயிஷா, பொம்மை டாஸ்கின் போது ரச்சித்தா பொம்மையை எடுத்தது குறித்து கமல் கேள்வி கேட்டார். அப்போது, ஆயிஷா பொம்மையை நான் அந்த நோக்கத்தில் எடுக்கவில்லை. தயவு செய்து என்னை நீங்க அப்படி Potray பண்ணிடாதீங்க என்றார். ஆயிஷாவின் இந்த பேச்சை கேட்ட கமல் சிரித்தபடி நான் என் கேரக்டரை தான் Potray பண்ணிட்டு இருக்கேன் என்றார். இதனால், கமல் ரசிகர்கள் அவரை இணையத்தில் திட்டி தீர்த்தனர்.

நேற்று ராம்
இதையடுத்து, இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக கமல், கடந்த வாரமே கூறிய நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேறினார். நாமினேஷன் லிஸ்டில் ஆசிம்,கதிர், ஏடிகே இருந்த நிலையில் 3பேரும் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து,ஆயிஷா மற்றும் ஜனனி இருவரும் ஹாட் சீட்டில் இருந்தநிலையில், ஜனனி தப்பித்து ஆயிஷா வெளியேறி உள்ளார்.

ஆயிஷா வெளியேறினார்
கமல்ஹாசனை சந்தித்த ஆயிஷாவுக்கு பயண வீடியோ போட்டு காட்டப்பட்டது. இதைப்பார்த்த ஆயிஷா, இத்தனை நாட்கள் மக்கள் என்னை எப்படி பார்த்தார்கள் என்று தெரியவில்லை என்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி வந்தன் மூலம் யாரையும் நம்பக்கூடாது என்பதை தெரிந்து கொண்டேன் என்று ஆயிஷா சொன்னார்.

மனிதர்களை நம்புங்கள்
அப்போது குறுக்கிட்ட கமல், கடவுளை வேண்டுமானால் நம்பால் இருக்கலாம் ஆனால், மனிதர்களை நம்ப வேண்டும்,நம்பிக்கையோடு வெளியில் நல்ல பயணத்தை தொடங்குகள் என்றார். பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ராம்,ஆயிஷா வெளியே உள்ளநிலையில், தற்போது வீட்டில் 11 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.