இந்த வாரம் எஸ்கேப்பாக முடியல..பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராம்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து ராம் இன்று வெளியேறி உள்ளார்.

கடந்த அக்டோபர் 9ந் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தடபுடலாக தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், ஷிவின் கணேசன், சாந்தி, அசீம், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ரக்‌ஷிதா, ராம், ஏடிகே, மகேஸ்வரி, அமுதவாணன், கதிரவன், குயின்ஸி, நிவாசினி, தனலட்சுமி, விக்ரமன் என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த வாரம் வைல்டு கார்டு மூலம் நடிகை மைனா உள்ளே நுழைந்தார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் 21 போட்டியாளர்கள் இருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6

பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை எட்டி ஏறக்குறை அரைக்கிணறு தாண்டி விட்டதால், பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்று பார்த்தால் இந்த வாரம் மொக்கையான டாஸ்க்கை கொடுத்து ரசிகர்களை காண்டாக்கி விட்டார் பிக்பாஸ். தயவு செய்து ஏதாவது புதுசா யோசிங்க பிக்பாஸ் என பிக் பாஸ் பிரியர்கள் ட்விட்டரில் கெஞ்சி கதறிவிட்டார்கள்.

டபுள் எலிமினேஷன்

டபுள் எலிமினேஷன்

இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல் அறிவித்து இருந்தார். அப்போதாவது போட்டியாளர்கள் சிறப்பாக ஏதாவது செய்கிறார்களா என எதிர்பார்த்தால் அப்படி எதுவும் பெரிதாக செய்யவில்லை. இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஷோவுக்கு வந்து கதாபாத்திர டாஸ்க் குறித்து பேசினார். இதில் சிறப்பாக நடித்த அமுதவாணனை பாராட்டினார்.

ராம் வெளியேறினார்

ராம் வெளியேறினார்

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தான் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் இருக்கும், ஆனால், இந்த வாரம் டபிள் எவிக்ஷன் இருப்பதால், இன்று முதல் எவிக்ஷனை அறிவித்தார். இதில் குறைந்த வாக்குகளை பெற்ற ராம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, அவரின் பயண வீடியோவை போட்டு காண்பித்த கமல், நீங்கள் வீட்டில் கொஞ்சம் உற்சாகமாக இருந்து இருந்தால் இன்னும் நீண்ட நாட்கள் இருந்து இருப்பீர்கள் என்று கூறி, அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைத்தார்.

நாளைக்கும் இருக்கு சம்பவம்

நாளைக்கும் இருக்கு சம்பவம்

பிக் பாஸ் வீட்டில் ராம் இத்தனை நாட்கள் இருந்ததே பெரிய விஷயம், அவர் வீட்டிற்குள் பெரியதாக எதுவும் செய்யாமல் வீட்டில் மிக்ஸர் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இவரை எல்லாம், முதல் இரண்டு வாரத்திலே வெளியேற்றி இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல, நாளைய எவிக்ஷனில் ஆயிஷா வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X