ஆயிஷாவை அசிங்கப்படுத்தாதீங்க..காதலனின் ஏடாகூட பேட்டிக்கு நடிகர் விஷ்ணு சரியான பதிலடி!
சென்னை : ஆயிஷாவை வேண்டும் என்றே அசிங்கப்படுத்துகிறார்கள் என்று நடிகர் விஷ்ணு பேட்டியில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், தன்னையும் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக முன்னாள் காதலன் என சொல்லிக்கொண்டு ஒருவர் பேட்டி கொடுத்திருந்தார்.
மேலும், ஆயிஷாவுக்கு விஷ்ணு, லோகேஷ் என பல காதலர்கள் இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

அசிங்கப்படுத்தாதீங்க
இந்நிலையில், சத்யா சீரியலில் ஆயிஷாவுடன் இணைந்து நடித்த சீரியல் நடிகர் விஷ்ணு அளித்துள்ள பேட்டியில், ஆயிஷாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஆயிஷாவின் முன்னாள் கணவர் கொச்சையாக பேட்டி கொடுத்துள்ளார் என்றார். ஆயிஷா இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். அவர் இல்லாத போது அவரைப்பற்றி பேசுவது ரொம்ப தவறானது. ஆயிஷாவுக்கு இரண்டு திருமணம் நடந்து விட்டது என்ற விஷயத்தை இத்தனை வருஷமா சொல்லாமல் இப்போது சொல்ல என்ன காரணம்.

தப்பான நபரிடமிருந்து பிரிந்ததே நல்லது
அவர் வளர்ந்து கொண்டே செல்கிறார், அவரின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஆயிஷா பற்றி அசிங்கமாக பேசி வருகிறார். ஒரு தப்பான நபரிடம் இருந்து ஆயிஷா பிரிந்து வந்ததே நல்ல விஷயம். அதற்கு நான் காரணம் என்றால், உண்மையில் அதை பெருமையாக நினைக்கிறேன்.

ஆயிஷா நிச்சயம் பதிலளிப்பார்
ஆயிஷாவும் நானும் காதலிப்பதாக பல செய்திகள் பரவி வருகிறது. நான் அவங்களை காதலித்தேன் என்றால், ஆமாம் காதலிக்கிறேன் என்று சொல்லும் தைரியமும், தகுதியும் எனக்கு இருக்கு. ஆனால், நீங்கள் கிளப்பிவிட்ட வதந்திக்காக நாங்கள் காதலிக்கிறோம் என்று சொல்லமுடியாது. ஆயிஷா வெளியில் வந்ததும், அனைத்து கேள்விக்கும் நிச்சயம் பதில் சொல்வார்.

கமலிடம் மன்னிப்பு கேட்பார்
ஆயிஷா ஷார்ட் டெம்பர். அவருக்கு டக்குனு கோபம் வந்துவிடும். எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார் எதுவாக இருந்தாலும் பளிச்சென பேசி விடுவார் எல்லோரும் ஒரே நேரத்தில் டார்கெட் செய்ததால் தான் கமல் சார் முன்பு அப்படி கோபமாக நடந்து கொண்டார். அதை அவள் புரிந்து கொண்டிருப்பாள் இந்த வாரம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் கேட்கலாம் என நடிகர் விஷ்ணு பல கேள்விக்கு நச்சென்று பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











