Don't Miss!
- News
500 மாணவிகளுக்கு நடுவே.. தனிஆளாக தேர்வெழுதிய மாணவர்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட்..மருத்துவமனையில அனுமதி
- Lifestyle
வாஸ்துப்படி, இந்த பொருட்களால் வீட்டை அலங்காரம் பண்ணிடாதீங்க... இல்ல நிறைய இழப்பை சந்திப்பீங்க...
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Automobiles
இன்டர்சிட்டி பயணங்களுக்காக விரைவில் அறிமுகமாகிறது வந்தே மெட்ரோ! இது வந்தே பாரத்தின் மினி வெர்ஷனாக்கும்!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் தானா..? லீக்கான போட்டோ உண்மையா அல்லது எடிட்டட் வெர்ஷனா?
சென்னை: அக்டோபர் 9ம் தேதி தொடங்கி 105 நாட்களாக நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
டைட்டில் வின்னர் ரேஸில் ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், மூவருக்கும் சமமான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அசீம் தான் டைட்டில் வின்னர் என அவரது ரசிகர்கள் ஒரு போட்டோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த போட்டோவில் கமலின் வலது பக்கம் விக்ரமனும் இடது பக்கம் அசீமும் நிற்பதோடு, டைட்டில் வின்னரின் கையை கமல் உயர்த்தி பிடிப்பதாக உள்ளது.
பிக் பாஸூக்கு முன்பே வெற்றிபெற பக்காவாக பிளான் போட்ட அசீம்.. புட்டு புட்டுவைத்த சுந்தரவள்ளி !

பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 இன்றோடு முடிவுக்கு வருகிறது. இதனால் யார் டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஷிவின், விக்ரமன், அசீம் மூவர் மட்டுமே கிராண்ட் பினாலே மேடையில் ஏறவுள்ளனர். மூன்று பேருக்குமே டைட்டில் வெல்லும் வாய்ப்பு சரிசமமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் பெரும்பாலானோர் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என்றே கூறி வருகின்றனர்.

அசீம் டைட்டில் வின்னர்?
இந்நிலையில், நேற்று இரவே பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகிவிட்டது. அதில் ஹவுஸ்மேட்ஸ்களின் ஆட்டம் பாட்டம் முடியவும் கமல் என்ட்ரி கொடுப்பதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரோமோ குறித்து பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் அசீம் தான் டைட்டில் வின்னர் என போட்டோவுடன் கமெண்ட் செய்துள்ளார்.

அசீம் ரசிகர்களின் ஆர்வக் கோளாறு
அந்த போட்டோவில் கமலின் வலதுபுறம் கமலும் இடது புறம் அசீமும் நிற்கின்றனர். மேலும் டைட்டில் வின்னர் அசீம் தான் என்பதை அறிவிக்கும் வகையில் அவரின் கையை கமல் உயர்த்திப் பிடிப்பதாக அந்த போட்டோவில் உள்ளது. இந்த போட்டோ உண்மை என நம்பிய சில ரசிகர்கள், அசீம் தான் டைட்டில் வின்னர் என கூறி வருகின்றனர். மேலும் அசீம்க்கு வாழ்த்துக் கூறியும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

அசிங்கப்பட்ட ஆட்டோக்காரன்
ஆனால், இந்த போட்டோ போலி என்பது தற்போது தெரியவந்துள்ளது. கிராண்ட் பினாலே ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில் அசீம் தான் டைட்டில் வின்னர் என்பது பொய்யான தகவல் என சொல்லப்படுகிறது. மேலும், இது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டது எனவும், லைவ் நிகழ்ச்சியில் எடுத்து போட்டோ இல்லை எனவும் தெரிகிறது. காரணம் அந்த போட்டோவின் கீழே டிஸ்னி பிளஸ் லோகோ இருப்பதை பார்க்க முடிகிறது. ஆக இது ப்ரோமோவில் வந்த கமலின் போட்டோவுடன் எடிட் செய்யப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அசீம் மாதிரியே அவரது ரசிகர்களும் தற்பெருமை பேசி வருவதாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.