ஆட்டிடியூட் காட்டும் அசல் கோளார்..கதறி அழுத்த ஆயிஷா..சரியான கோளாறு தான்..விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6ன் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோவில் அசல் கோளாரு நடிகை ஆயிஷாவுக்கு வாடா, போடா கூப்பிடாதே என்று சரியான நோஸ்கட் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் இன்றைய எபிசோடில்,நீங்கள் யாரும் நட்பை தொடர விரும்புகிறீர்கள் என்பதை விளக்கும்படியும் பிக் பாஸ் கூறியதை அடுத்து, சீரியல் நடிகை அயிஷாவுடன் நட்பாக பழக விரும்புவதாக கூறி அவரை அழைத்து பேசுகிறார் கோளாரு அசல்.

இவருடன் நட்பை தொடர வேண்டும், ஆனால் அவர் வாடா போடா என்று கூப்பிடக்கூடாது, எனக்கு பிடிக்கவில்லை என்கிறார் இதனால் ஆயிஷா அதிர்ச்சி அடைந்தார்.

டென்ஷனான ஆயிஷா

டென்ஷனான ஆயிஷா

கோளாரு அசலின் பேச்சால் டென்ஷனான ஆயிஷா, எவ்வளவு விளக்கம் கொடுத்தும் அசல் கோளாறு அதை ஏற்றுக்கொள்ளாமல் பேசினார். இதனால் மூட் அவுட்டாகி தனியாக சென்று அழுதுக்கொண்டு இருக்கிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கோளாறு அசல் சரியான கோளாருதான் போல என கருத்து கூறியுள்ளார்.

மகா ஜனங்களே

மகா ஜனங்களே

மற்றொரு இணையவாசி, அய்யா,அம்மா 24 மணிநேரமும் ஓடிடியில் பாக்கற மகா ஜனங்களே இது உண்மையா இல்ல பிராங்கா கொஞ்சம் கேட்டு சொல்லிட்டு போங்க என பிக் பாஸ் நிகழ்ச்சியை கிண்டலடிக்கும் வகையில், கவுண்டமணியின் போட்டோவை போட்டு கேட்டுள்ளார்.

சத்தியாவிற்கே சோதனையா

சத்தியாவிற்கே சோதனையா

ஜி தமிழ் தொலைக்காட்சியில் சத்தியா சீரியல் பார்த்து நடிகை ஆயிஷாவின் தீவிர ரசிகரான ஒரு இணையவாசி அட அட அட சத்தியாவிற்க்கு இப்படி ஒரு சாத்தியசோதனையா என கேட்டுள்ளார்.

ஒவர் சீன் உடம்புக்கு ஆகாது

ஒவர் சீன் உடம்புக்கு ஆகாது

பிக் பாஸ் வீட்ல சண்டை போடுறதும் சன்டே ஆனா, கமல் சார் வெளியே அனுப்பறதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும், ஒரு ரசிகர் மச்சான்.. மச்சான்.. ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே என்ற பாடலை பதிவிட்டு, ஏலேய் கோளாறு இப்ப எதுக்கு ஆயிஷாவை அழ வைக்கிற என பதிவிட்டுள்ளார். பலரும் கோளாரு அசலுக்கு அவ்வளவு சீன் இல்ல, ஒவர் சீன் உடம்புக்கு ஆகாதுபா தம்பி என பதிவிட்டுள்ளனர்.

கோளாருக்கு கோளாரு பிடிச்சிருச்சு, கடந்த சீசன்ல நிரூப் எல்லாரையும் வா டி, பொடி, சொன்னப்போ இப்படிலாம் பேச கூடாது சொன்னாங்க. ஒரு பொண்ணு ஒரு பையனை பார்த்து வா டா.. போடா சொல்லலாமா? அதுவும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சில..நான் கோளறுக்கும் சப்போர்ட் பண்ணல. இருந்தாலும் ஆயிஷா பீல்பண்ண வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X