என்ன தான் ஜிபி. முத்து பெரிய ஆளாக இருந்தாலும்.. இந்த மேட்டரில் அமுதவாணன் தான் பெஸ்ட்!

சென்னை: விஜய் டிவியின் டிஆர்பி பெருங்கடலான பிக் பாஸ் சீசன் 6 களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் கமல்ஹாசன் அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசினார்.

அப்போது போட்டியாளர்களின் நிறை, குறைகளை பேசியதோடு, சில போட்டிகளையும் நடத்தி வேடிக்கை காட்டினார்.

பிக் பாஸ் முதல் வாரம்

பிக் பாஸ் முதல் வாரம்

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் தொடங்கியது. நேற்றுடன் முதல் வாரத்தை நிறைவு செய்துள்ள பிக் பாஸ் சீசன் 6ல் இதுவரை பல சுவையான, சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இந்நிலையில், சனி, ஞாயிறு என இரு தினங்களிலும் நடிகர் கமல்ஹாசனின் என்ட்ரி, போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கியது. மொத்தம் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இப்போது மைனா நந்தினியும் இணைந்துள்ளார். இதனிடையே முதல் வாரத்தில் போட்டியாளர்களின் நிறை, குறைகளை சக போட்டியாளர்கள் மூலமாகவே தெரிய வைத்தார்.

மிமிக்ரி அமுதவாணன்

மிமிக்ரி அமுதவாணன்

விஜய் டிவி தயாரிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் சேனலில் இருந்தே சில போட்டியாளர்களை களமிறக்குவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் 'கலக்கப் போவது யாரு', 'ஜோடி நம்பர் 1' புகழ் அமுதவாணன் கலந்துகொண்டு பாத்ரூம் க்ளப்பின் தலைவராக பொறுப்பேற்றார். எல்லோரிடமும் சிரித்து பேசும் அமுதவாணன், தனது க்ளப்பையும் சக போட்டியாளர்களையும் அதேபாணியில் டீல் செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். போட்டியாளர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்களில் அமுதவாணனும் ஜிபி முத்துவுமே முதலிடத்தில் உள்ளனர்.

அதிகமான க்ரீன் டேக்ஸ்

அதிகமான க்ரீன் டேக்ஸ்

ஜிபி முத்துவிடம் இருந்து விளையாட்டை தொடங்கிய கமல், எல்லோருக்கும் சூப்பரான டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அதாவது, 'இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்... இவரை மாதிரி இன்னொருத்தர் பிக் பாஸ் வீட்ல இருந்தா நல்லாருக்கும்" என்று போட்டியாளர்கள் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறினார். இதில், ஆயிஷா, குயின்ஷி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி என பெரும்பாலோனோர் அமுதவாணனுக்கு பாசிட்டிவான க்ரீன் டேக்ஸ் கொடுத்தனர். ஜிபி முத்துவுக்கும் ஆதரவு இருந்தபோதும் அமுதவாணன் அவரை விடவும் டாப்பில் சென்றார். இதனால், ஒருகட்டத்தில் அமுதவாணன் கண்கலங்கிவிட்டார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

முன்னதாக 2020ம் ஆண்டு ''பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவேன். நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால், அந்த இடத்தையே வேறமாதிரி மாற்றிக் காட்டுவேன்" எனக் கூறியிருந்தார். இதோ இப்போது அவரின் ஆசை நிறைவேறியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் அமுதவாணனும் ஜிபி முத்துவும் தான் எண்டர்டெயினர்களாக உள்ளனர். முதலில் ஜிபி முத்துவுக்கு ஆதரவு அதிகம் இருந்த நிலையில், அது இப்போது அமுதவாணன் பக்கம் அதிகரித்துள்ளது. காரணம், அமுதவாணன் எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என எளிதாக கடந்து செல்கிறார். ஆனால், ஜிபி முத்து சில நேரங்களில் வெளிப்படையாக பேசுகிறேன் எனக் கூறி போட்டியாளர்களிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொள்கிறார். இதுவரை அமுதவாணன் அதிகம் டேக்ஸ் வாங்க காரணம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X