Bigg Boss 7 Promo - பிரதீப்பை பங்கமாக கலாய்க்கும் விஷ்ணு, கூல் சுரேஷ்.. பிக்பாஸ் 7 மூன்றாவது ப்ரோமோ

சென்னை: Bigg Boss 7 Promo (பிக்பாஸ் 7 ப்ரோமோ) பிக்பாஸ் 7ன் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிரதீப்பை விஷ்ணு, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலாய்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனை தொட்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடக்கும் பிக்பாஸ் 7ல் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர். ஆனால் இந்த போட்டியாளர்களில் வெகு சிலரை தவிர்த்து வேறு யாரும் பிரபலமாக இல்லை எனவே இந்த சீசன் சுவாரசியமாக போகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.

Bigg Boss Season 7 3rd Promo is Out Now

சந்தேகம் தீர்ந்தது: ஆனால் அந்த சந்தேகத்தை பிக்பாஸ் முதல் சில நாட்களிலேயே உடைத்துவிட்டார். குறிப்பாக இரண்டு நாமினேஷன்கள், பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு, முதலில் பர்சேஸிங் அதற்கு பிறகு டாஸ்க் என ரூல்ஸ்களை புதிதாக கொண்டுவந்தார். மேலும் பங்கேற்ற போட்டியாளர்களில் பிரதீப் ஆண்டனி பலருடன் முட்டிக்கொண்டிருக்கிறார்.

வெல்வதுதான் நோக்கம்: அவர் பவா செல்லதுரையின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும் அவரிடமே சென்று எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும். நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நாட்கள் இருந்திடாதீர்கள். ஏனென்றால் நான் வெல்ல வேண்டும் என்று ஓபனாகவே கூறினார். அதேபோல் சாப்பாட்டு விஷயத்திலும் கேப்டனிடம் சண்டையை ஆரம்பித்தார்.

ஸ்டேட்டர்ஜி: பிரதீப்பை பார்க்கும் சக ஹவுஸ்மேட்ஸ்கள் இவர் ரொம்பவே ஸ்டேடர்ஜியாக விளையாடுகிறார் என்றும் தங்களுக்குள் பேச ஆரம்பித்திருக்கின்றனர். அதேபோல் கடந்த சீசனில் எப்படி அசீம் நெகட்டிவ் ஷேடில் வந்தே டைட்டிலை தட்டி சென்றாரோ அதேபோல் பிரதீப்பும் டைட்டிலை தட்டி செல்வாரோ என்று ரசிகர்களும் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

பிக்பாஸ் ப்ரோமோ: இந்நிலையில் பிக்பாஸ் 7ல் இன்றைக்கு ரீபேமெண்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது வீட்டிலிருந்து ஒரு ப்ராப்பெர்ட்டியை கொண்டு வந்து அதோடு எடை மேடையில் நிற்க வேண்டும். இதில் தோற்றுப்போனால் மேக்கப் பொருட்கள் எடுத்து செல்லப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதுதொடர்பான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கூல் சுரேஷ், விஷ்ணு, மணிசந்திரா ஆகியோர் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது சுரேஷிடம் விஷ்ணு, 'டீமை நோட் பண்ணி வெச்சிக்கோங்க என்று சொல்ல அதற்கு சுரேஷோ விக்ரம் மணியோட ஆள் என்று சொல்கிறார். அதற்கு பிறகு விஷ்ணு, அண்ணே இவரை (பிரதீப்பை கைகாட்டி) கூப்பிட்டா செம இண்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு. பேசுனாலே கொன்றுவேனு சொல்றான் அண்ணே என சொல்ல மற்ற இருவரும் பயங்கரமாக சிரிக்கிறார்கள். முன்னதாக வெளியான இரண்டாவது ப்ரோமோவி பிரதீப்பை பார்த்து உங்களுக்கு டிமோட்டிவேட் பண்றது ஒரு ஸ்டேட்டர்ஜியா என ஐஷூ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X