11 பாய்ஸ் கூட ஒரே வீட்டில் இருந்தேன்.. தப்பு தப்பா பேசுனாங்க.. பூர்ணிமாவின் கண்ணீர் கதை!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பூர்ணிமா தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் அந்த சீசனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
விசித்ரா கண்ணீர் கதை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், கதை சொல்லும் டாஸ்க் வந்து இருக்கிறது. இந்த டாஸ்கில் அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை விசித்ரா, தான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ தன்னை நீ ரூமுக்கு வா என்று அழைத்தார். மேலும் மாலையானால், குடித்துவிட்டு அறையை வந்து தட்டுவார்கள்.
படுக்கைக்கு அழைத்தார்: அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என வருத்தத்தில் இருந்தேன்.அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்தவர் தான் அறையை மாற்ற உதவி செய்தார். அந்த மேனேஜர் தான் இப்போது எனது கணவர் என கண்ணீருடன் கூறியிருந்தார். இந்த விஷயம் இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.
பூர்ணிமா: இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளரான பூர்ணிமா தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், காலேஜ் முடித்ததற்கு பிறகு ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. அந்த கம்பெனியில் எட்டு மாதம் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால், திடீர்னு என்னை வேலைல இருந்து நிறுத்திட்டாங்க.
11 ஆண்களுடன்: எனக்கு என்ன பண்றதுனு தெரில வீட்டுக்கும் பணம் அனுப்பனும் என்பதால், பல இடத்தில் வேலை தேடி அலைந்தேன். அப்போதுதான், ஒரு டிஜிட்டல் கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆனால் தங்குவதற்கு வீடு இல்லை, அப்போது, 11 ஆண்கள் தங்கி இருக்கும் வீட்ல, நானும் பணம் கொடுத்து தங்கினேன்.
தப்பா பேசுனாங்க: அந்த பசங்களால எனக்கு எந்த தொல்லையும் இல்ல, ஆனால், அக்கம் பக்கத்தில் சுத்தி இருக்கிறவங்க எல்லோரும் தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க, ஒரு நாள் போலீஸ் அங்க ரைடு வந்துட்டாங்க. அவங்க இந்த வீட்டில இருக்காதனு சொல்லிட்டாங்க, ஆபீஸ்ல தங்கினேன் அங்கேயும் இருக்க முடியாததால், அம்மா தங்கச்சி வருவாங்கனு சொல்லி ஒரு வீட்டுக்கு வாடகைக்கு போனேன்.
சொந்த வீடு: அதுக்கு பிறகு சேனல் ஆரம்பிச்சு வீடியோ பண்ண ஆரம்பிச்சேன். வீடியோ எல்லாம் நல்லா ட்ரெண்டாக ஆரம்பிச்சது, அதன் மூலம் பணம் சம்பாதிச்சேன். இப்போ சொந்தமாக வீடு, கார் எல்லாமே வைச்சிருக்கிறேன் என்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பூர்ணிமா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











