VJ Archana: இப்படி ஒரு கதை இருக்கா.. யார் இந்த விஜே அர்ச்சனா.. வெளியான புது கதை!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், இன்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் டைட்டில் வின்னர் விஜே அர்ச்சனா என தகவல் வெளியாகி உள்ள நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, அர்ச்சனா குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
அதில்,பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எந்த அளவிற்கும் இல்லாத அளவில் இந்த முறை ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. வழக்கமாக போட்டியாளர்களைத்தான் ட்ரோல் செய்வார்கள். ஆனால், இந்த முறை கமல்ஹாசனே வேண்டாம் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சிம்புவை போடுங்க என்றார்கள். அதற்கு காரணம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது தான்.

இந்த சீசனில் வலுவான போட்டியாளராக இருந்த விசித்ரா வெளியேறினார். அதே மற்றொரு வலுவான போட்டியாளர் என்று கருதப்பட்ட பூர்ணிமா பணப்பெட்டி டாஸ்கில் 16 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். தற்போது இறுதிப்போட்டியில், விஜே அர்ச்சனா, மணி, தினேஷ், விஷ்ணு, மாயா ஆகியோர் இறுதிப்போட்டியில் உள்ளனர்.
விஜே அர்ச்சனா: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று தகவல் வெளியாகி உள்ளதால், சோஷியல் மீடியாவில், அர்ச்சனா யார் என்கிற தேடல் அதிகரித்துள்ளது. இந்த அர்ச்சனா யார் என்றால், இரண்டு ஆண்டுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்த அர்ச்சனா அவருடன் எடுத்துக் கொண்ட படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் அர்ச்சனாவின் தலையில் கை வைத்து வைரமுத்து ஆசீர்வதித்து இருப்பார்.
இப்படி ஒரு கதை இருக்கா: இந்த போட்டோவை பார்த்த சின்மயி, ஆரம்பத்தில் இதுபோலத்தான் அனைத்தும் இருக்கும். தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள். அவரை சந்திக்கும்போது யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்று கமெண்ட் செய்திருக்கிறார். சின்மயி போட்ட கமெண்டை டெலிட் செய்த அர்ச்சனா, நான் அந்த பதிவை போட்டதற்கு காரணம் என் அப்பா, ஒரு தமிழ் பேராசிரியர். எங்கள் குடும்பத்தில் தமிழுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. இது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட். இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும் என்று கூறி சின்மயிக்கு சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











