Jovika salary: 60 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜோவிகா வாங்கிய சம்பளம்..இத்தனை லட்சமா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள வனிதாவின் மகள் ஜோவிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1ந் தேதி தொடங்கியது.

bigg boss season 7 contestants jovika salary

நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல், சண்டைகளும் சர்ச்சரவுகளும் அதிகமாக இருந்தது.

பிக் பாஸ் சீசன் 7: 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்,முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் நடத்தப்பட்டு அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரையும் உடல் நல பிரச்சனை காரணமாக தானாகவே வெளியேறினார். அதன் பின் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் மக்களின் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.

சூடுபிடித்த ஆட்டம்: இதன்பின் பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்த நிலையில், அதிரடியாக அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்ன பாரதி என ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே நுழைந்தனர். இதில் வந்ததும் வராததுமாக அன்ன பாரதி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கானா பாலா வெளியேற்றப்பட்டார்.

ஜோவிகாவின் சம்பளம்: இந்த வாரம் சரவண விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், விசித்ரா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காதவிதமாக ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார். 60 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜோவிகாவிற்கு 1 வாரத்திற்கு ரூ. 2 லட்சம் என சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்ததாக கூறப்படுகிறது

சோஷியல் மீடியாவில்: நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டார். ஜோவிகாவுக்கும் மற்றொரு போட்டியாளரான விசித்ராவுக்கும் இடையே படிப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை அதனால், தனக்கு இருக்கும் திறமையை வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று பேசி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X