Bigg Boss season7: அம்மா மாதிரி நடிக்கல.. மரியாதையா பேசுங்க…கண் கலங்கிய விசித்ரா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோவில் விசித்ரா கண்கலங்கி அழுகிறார்.

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டையும் சர்ச்சரவுகளும் அதிகமாகத்தான் இருக்கும். அதுவும் இந்த சீசனில் சண்டை மிகவும் கேவலமாக இருக்கிறது.

Bigg Boss season 7 Day 45 today Promo 3 and fans reaction

மாயா ,பூர்ணிமா, ஜோவிகா ஒரு டீமாக செயல்பட்டுக்கொண்டு விசித்ராவை டார்கெட் செய்து வருகின்றனர்.

சண்டை வீடு: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ந் தேதி ஒளிபரப்பாகி தற்போது ஏழாவது வாரத்தை எட்டி உள்ளது. இதில் கடந்த வாரம் ஐசு நாமினேஷனில் சிக்கிய நிலையில், குறைந்த வாக்குகளை பெற்று அவர் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால்,பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு சிலர் எவிக்ஷனை நினைத்து கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், இன்னும் ஒரு சிலர் ஒவராக ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோ: நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் தினேஷை அழைத்து சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதன் படி ஹவுஸ் மேட்ஸ்களிடம் சிடுசிடுவென தினேஷ் பேச அதனால் விஷ்ணு ட்ரிக்கர்ராகிவிட்டார். இதையடுத்து இன்று காலை வெளியான இரண்டாவது ப்ரோமோவில், தினேஷ் விஷ்ணுவை ப்ரோமோ பொறுக்கி என கூற, கடுப்பான விஷ்ணு, யாரை பார்த்து பொறுக்கினு சொல்ற, பொறுக்கி கிறுக்கினு சொன்ன வேற மாதிரி ஆகிடும் என்று அருகில் இருந்த சோபாவை எட்டி உதைக்கிறார்.

அம்மா மாதிரி நடிக்கல: இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவில், விசித்ரா நான் இந்த வீட்டில் அம்மாவாக நடிக்கவில்லை,விக்ரமை பார்த்தால் என் பையன் மாதிரி தான் தோன்றுகிறது. அதை கிண்டல் செய்து டிராமானு பேசும் போது அது என்னை கஷ்டப்படுத்துகிறது. அதே போல என்னை அனைவரும் விசித்ரா மேம் என்று கூப்பிடுங்கள், மரியாதை இல்லாமல் அழைப்பது வருத்தமா இருக்கு.

கண்கலங்கிய விசித்ரா: இந்த 50 வயசுல வந்து நிறைய பேர் எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள். இப்போ நான் விட்டு கொடுத்தால், அது ரொம்ப தப்பா போய்விடும் என்று சொல்லி கண்கலங்குகிறார். அப்போது, பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் அப்போ நீங்களும் என்னை மேம் என்று கூப்பிடுங்கள் என்று சொன்னதை கேட்டு விசித்ரா கண் கலங்கி அங்கிருந்து கிளம்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X