என்னடா.. இப்படி முதுகுல குத்தீட்டீங்க.. சிறைக்கு செல்ல மறுத்த விசித்ரா,அச்சனா!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 45 நாட்களை எட்டி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது, கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, விசித்ரா, விஜய் வர்மா, தினேஷ்,கானா பாலா ஆகியோர் உள்ளனர்.
பிக் பாஸ் 45வது நாள்: பிக் பாஸ் வீட்டில் இந்த வார கேப்டனான தினேஷ் உள்ளார். மாறாக பிக் பாஸ் அவரை தனியாக அழைத்து அவருக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில், மீண்டும் சில டாஸ்க்குகளை கொடுத்து அதில் கானா பாலாவை நடுவராக போட்டு இருந்தார். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என்று இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது.
கோல்ட் ஸ்டார்: இந்த டாஸ்க்கில் பெண்கள் வேடமிட்டு இருந்த ஆண்கள் அணி தான் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியில் இருக்கும் ஒருவருக்கு கோல்ட் ஸ்டார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கோல்ட் ஸ்டார் மணிக்கு கொடுக்கப்பட்டது. இதனால், மாயா மற்றும் பூர்ணிமா கடுப்பாகி மணிக்கு எதற்கு கோல்ட் ஸ்டார் என புலம்பி கொண்டு இருந்தனர்.
3வது ப்ரோமோ: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், சிறப்பாக விளையாடாத போட்டியாளர் என விசித்ரா மற்றும் அர்ச்சனாவின் பெயரை கூறுகிறார் தினேஷ். இதனால், கோவம் அடைந்த விசித்ரா, என்னடா எல்லாரும் இப்படி முதுகுல குத்திட்டீங்க என்று கேட்கிறார். மேலும், நாங்க டாஸ்கை சரியாகத்தான் செய்தோம். இதனால்,நாங்க ஜெயிலுக்கு போகமாட்டடோம் என்று கூறி விடிய விடிய பனியிலேயே படுத்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











