Bigg Boss Grand Finale: பிக்பாஸ் வீடு ஒரு ஜெயில்.. புரளி பேசுகிறார்ககள்.. போட்டியாளர்கள் பேச்சு!
சென்னை: பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 104 நாட்களை கடந்து இன்று இறுதி கட்டத்தை வெற்றிகரமாக நடந்து வருகிறது. கடந்த 104 நாட்களாக பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியிட்டவர்களில், 5 பேர் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக இன்று முடிசூடவுள்ளார்.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில், ஒவ்வொரு வாரமும்,ஒவ்வொருவர் என பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்கள். பவா செல்லத்துரை மட்டும் தானாக வெளியேறினார். இதையடுத்து, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறினர்.

மேலும், பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இறுதி வாரத்தில் அர்ச்சனா, மணிச்சந்திரா, மாயா, தினேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக கமல்ஹாசன் முன்னிலையில் அறிவிக்கப்படுவார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் கிராண்ட் பினாலே கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளது.
பிக்பாஸ் வீடு ஒரு ஜெயில்: கமல் பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் இந்த வீட்டில் இருந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அதில் பேசிய பிக்பாஸ் வீடு ஒரு ஜெயிலைப் போன்றது. நம்மை அது பண்படுத்தும். பிக்பாஸ் வீடு கிட்டத்தட்ட ஒரு நூலகம். நாம் என்ன புத்தகத்தை எடுக்கின்றோம் என்பதைப் பொறுத்து நமது அனுபவம் அமையும் என கூல் சுரேஷ் கூறினார்.
6 பாடல்கள்: இதையடுத்து பேசிய நிக்சன், சில பேர் புகழ்ந்து பேசினாங்க, சிலர் பேர் திட்டுறாங்க, வெளியில் வந்ததும் நான் என் வேலையில் கவனமாக இருந்துவிட்டேன். தற்போது ஒரு சில பாடல்களை எழுதி இருக்கிறேன். மேலும், பல வாய்ப்பு வரும் என்று என்றார்.
ரவீனா: இந்த வீட்டில் இருந்து வெளியில் இருந்து வெளியில் வந்த போது நிறைய விஷயத்தை கற்றுக்கொண்டேன். ஆனால், சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் வந்திருந்தது. உண்மையான அன்பு கிடைத்தது. நமக்காக நாம் சுயநலமில்லாமலும் இருக்க வேண்டும், சுயநலத்துடனும் இருக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன். சமூகவலைதளங்களில் புரளி பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மக்களை நேரில் சந்திக்கும்போது அன்பு செலுத்தினார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











