Bigg Boss 7: மற்றவரின் உணர்வை மதியுங்கள்… விசித்ராவை கண்டித்த இசையமைப்பாளர்!

சென்னை: மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு படித்தாலும் என்ன பயன் என்று ஜோவிகா விசித்ரா மோதல் குறித்து ஜேம்ஸ் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் விசித்ராவிற்கும் வனிதா மகள் ஜோவிகாவிற்கும் இடையே நடந்த மோதல் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டது.

Bigg Boss season 7: Music composer James Vasanthan condemned Vichitra

என்னுடைய பர்சனல் பக்கமான படிப்பை பற்றி பேச வேண்டாம் என்று இவரிடம் நான் சொன்னேன். நாங்கள் வேறு கட்டத்திற்கு வந்து விட்டோம். தயவு செய்து அதனை இழுக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து என்னை விமர்சனம் செய்து கொண்டே இருந்தார் என்றார் ஜோவிகா.

கமல்ஹாசன் விளக்கம்: இதனையடுத்து பேசிய கமல்ஹாசன், உங்களுக்கு பரிந்து பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உயிரைக்கொடுத்தாவது படிக்க வேண்டும் என்று சொல்வது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். 8 ஆவது வரை படித்து இருக்கிறீர்கள், ஆகையால் நீங்கள் நம்ம ஆளு. கல்விதான் கலங்கரை விளக்கம். ஆனால், அதற்கு முதலில் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிய வேண்டும் அல்லவா?. நான் காட்டில் இருந்து கொண்டு கலங்கரை விளக்கத்தை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. இதில் ஜோவிகாவின் நிலைப்பாடும் சரியானது, விசித்ராவின் நிலைமைப்பாடும் சரியானது என கமல் தெளிவாக பேசி இருந்தார்.

ஜேம்ஸ் வசந்தன் கருத்து: ஜோவிகா படிப்பு குறித்து பேசியது இணையத்தில் விவாதப் பொருளான நிலையில், இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இக்கருத்தை ஆவேசமாகச் சொல்ல முயன்ற விசித்ராவின் அணுகுமுறையே அடிப்படைத் தத்துவத்தை விவாதத்துக்கு இடமாக்கி விட்டது.

மன உணர்வுகளை மதிக்காதவர்: விசித்ராவின் கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. முழுக்க முழுக்க சரியானது தான். ஆனால், அவர் வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறானது. இந்த வயதில், இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகு உங்கள் வார்த்தையிலும், செயலிலும், உணர்வுகளிலும் கட்டுப்பாடு இல்லை. நீங்கள் எப்படி இளைய தலைமுறையைக் குற்றம் சொல்லமுடியும்? ஒரு நல்ல அறிவுரையைச் சொல்கிறேன். பிறர் மனம் நோகும் அளவுக்கா சொல்வது? மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு படித்திருந்தாலும் என்ன பயன்? என ஜேம்ஸ் வசந்தன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X