பொம்பள கேஸ் போட்டு அனுப்பிட்டாங்க.. என் வாய கிளறாதீங்க..கடுப்பான பிரதீப்!

சென்னை: அக்டோபர் மாதம் விறுவிறுப்பாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 96 நாட்களை கடந்து, அடுத்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கின்றது. எனவே இறுதிப்போட்டிக்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் யார்? இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்த போட்டியில் களமிறங்கிய பிரதீப், பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி உரிமைக்குரல் எழுப்பினார்கள். இதையடுத்து, சகபோட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, கமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெறியேறியதை அடுத்து மறைக்கப்பட்ட உண்மைகளை பிரதீப் தனது எக்ஸ் தள பக்கத்தில் புட்டுபுட்டு வைத்துள்ளார்.

Bigg Boss season 7 pradeep antony slams poornima fans

பிக் பாஸ் சீசன் 7: பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதுமே பிரதீப்பிற்கு என்று இணையத்தில் தனிக்கூட்டம் உருவானது. இதனால் அவர் என்ன பேசினாலும் ரசிகர்கள் அதை வைரலாக்கினார்கள். ஆனால்,திடீரென ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல், பிரதீப்பிற்கு மக்கள் ஆதரவாகவும், கமலுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இணையத்தில் கமலுக்கு கண்டனம் குவித்ததை அடுத்து, கடுப்பான கமல், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது நான் இல்லை நீங்க தான் என்று குறும்படத்தை போட்டு காட்டி நெட்டிசன்களிடம் இருந்து தப்பித்தார்.

பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா: இந்நிலையில் பூர்ணிமா, 16 லட்சம் ரூபாய்யுடன் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இறுதிப்போட்டிக்கு செல்வது கடினம் என நினைத்த பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதால் குஷியான பிரதீப் பேன்ஸ், பிரதீப் ரசிகர்கள் ரெட் கார்டு கொடுத்த அவருக்கு இது தேவை தான் என ட்விட் செய்து வருகிறார்கள். இதை பார்க்க பூர்ணிமா ரசிகர்கள், கேரக்டர் அசாசினேஷன் கேம் விளையாடியவர் பிரதீப் என திட்டி வருகின்றனர். இணையத்தில் இரண்டு ரசிகர்களும் மாறி மாறி சண்டைப்போட்டுக்கொண்டு வருவதை பார்த்து கடுப்பான, பிரதீப், பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறு அடிக்குற கும்பல் லாம் இஷ்டத்துக்கு பேசி வாய் கெளறாதீங்க. நான் கேரக்டர் அசாசினேஷன் கேம்களை விளையாடுவதில்லை, அது என்னுடைய பழக்கம் இல்லை என பதிலடி கொடுத்திருந்தார்.

பொம்பள கேஸ் போட்டாங்க: ,இருந்தும் விடாமல் பூர்ணிமா ரசிகர்கள் பிரதிப்பை தொடர்ந்த விமர்சித்து வந்ததால் கடுப்பான பிரதீப், என்ன அடிச்சு சாவடிச்சு டைட்டில எடுத்துக்கனு நான் தான் சொன்னேன். அவங்க பெருந்தன்மையா பொம்பள case போட்டு அனுப்பிசிட்டாங்க. அப்டி தான் நான் பார்க்குறேன். உண்மையில் நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. இந்த சீசன் முடிஞ்சதும் நான் போய் சம்பளம் வாங்கிட்டு வர்றேன். அநியாயத்துக்கு டாக்சிக்கா இருக்கு என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X