Bully Gang நேர்மையான விளையாடுங்கள்.. அசிங்கமா இல்ல.. மாயாவை எச்சரித்த ரச்சித்தா மகாலட்சுமி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் தினேஷ் - ரச்சிதா குறித்து மாயா மற்றும் பூர்ணிமா பேசியதற்கு ரச்சிதா மகாலட்சுமி தனது கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, அந்த சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இணை பிரியாத தம்பதிகளாக வாழ்த்து வந்த இவர்கள் தற்போது, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரிவுக்கான காரணம் என்னெவென்று தெரியவில்லை.
பிக் பாஸ் சீசன் 7: கடந்த பிக் பாஸ் சீசனில் ரச்சித்தா மகாலட்சுமி கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய நிலையில், தற்போது தினேஷ் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் யாரை காலி செய்து வெளியே அனுப்பலாம் என்று மாயா, பூர்ணிமா,ஜோவிகா, ஜசு திட்டம் போட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.
பிளான் போட்ட மாயா: இந்த நேரத்தில் தினேஷ், அனைத்து பிரச்சனைக்கும் துணிந்து கேள்வி கேட்டு ஒரு சவாலான போட்டியாளராக இருப்பதால், அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பிளான் போடுகின்றனர். அதாவது, மாயா பூர்ணிமாவிடம் தினேஷ் கிட்ட அவர் மனைவி ரச்சித்தா பற்றி கேள்வி கேட்டு அவரை மடக்க வேண்டும் என்று பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடும் கண்டனம்: இந்த வீடியோவைப் பார்த்து கடுப்பான ரச்சித்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா... இது ஒரு மோசமான வியாபாரம். ஒவ்வொருவரும் அதைப் பற்றி விவாதிப்பதற்கும் அல்லது கருத்து தெரிவிப்பதற்கும் என் வாழ்க்கை ஒரு பொதுப் பிரச்சனை இல்லை.
Bully Gang: யாரும் என்னையோ அல்லது எனது தனிப்பட்ட வாழ்க்கை மலிவான விளையாட்டுக்காக பலன்களுக்காக பயன்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை...இப்படி விளையாட உங்களுக்கு வெட்கமா இல்லையா? இந்த மலிவான விளையாட்டுத் திட்டங்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.. Bully Gang நேர்மையாக விளையாடுங்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











