Bigg Boss 7: டிரஸ் பத்தி எப்படி பேசலாம்.. முட்டாள் தனமான பேச்சு.. விசித்ராவிற்கு குவியும் கண்டனம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று நாமினேஷன் சுற்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில், பெரும்பாலான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Bigg Boss Season 7 Sanam Shetty condemns actress Vichitras speech

இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை மற்றும் விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாமினேஷன்: கடந்த ஆறு சீசன்களில் முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொள்வார்கள் என்பதால்,முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால் இந்த சீசனில் இரு வீடுகள் மற்றும் இரட்டை நாமினேஷன் முறை அமலுக்கு வந்துள்ளதால், முதல் நாளே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.

என்ன டிரஸ் இதெல்லாம்: இதில் வீட்டின் கேப்டனாக இருக்கும் விஜய் வர்மா, பாவா செல்லத்துரை மற்றும் அனன்யா ஆகியோரையும் நாமினேட் செய்திருந்தார். மேலும், விசித்ரா அனன்யா, ஐஷு ஆகியோரை நாமினேட் செய்து விட்டு, இந்த வீட்டில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். இந்த இடத்தில் எப்படி டிரஸ் போடவேண்டும் என அனன்யாவிற்கு தெரியவில்லை. இதனால், நான் அவரை நாமினேட் செய்கிறேன் என்றார்.

என் இஷ்டம்: இந்த காரணத்தால் சிலர் நாமினேட் செய்யவில்லை என்று சிலர் நாமினேட் செய்து இருப்பதாக பிக் பாஸ் தெரிவித்ததை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர் கடுப்பாகி. டிரஸ் பத்தி எல்லாமா பேசுவாங்க. நாங்க இப்படித்தான் டிரஸ் போடுவோம், பிடிக்கலனா அவங்க வெளியில் போகட்டும் என்று பேசி இருந்தனர்.

இது என்ன முட்டாள்தனம்: இதுகுறித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரித்துள்ள பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரான சனம் ஷெட்டி, ஹாலோ மேடம், நீங்க கண்ண மூடிகிட்டு உங்க வீட்டுக்கு போயிடுங்க... இது என்ன முட்டாள்தனம்? பெண்கள் கடக்க முயற்சிக்கும் அடக்குமுறையை ஊக்குவிப்பதை முதலில் நிறுத்துங்கள். நீங்க உளவியல் பட்டம் பெற்றவர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். சனம் ஷெட்டி மட்டுமில்லை, இதைப்பார்த்த பல பெண்களும் விசித்ராவை வெளுத்து வாங்கி வருகின்றனர். அநேகமாக அவர் இந்த வாரத்தில் வெளியேறக்கூட வாய்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X