பெத்தவங்க ரோட்ல நடக்க முடியாது..பிக் பாஸ் வீட்ல ஐஷு என்ன வேலை பண்ற.. வெளுத்து வாங்கிய சுசித்ரா!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஐஷு செய்ற வேலையைப் பார்த்தா பெத்தவங்க ரோட்ல நடக்க முடியாது என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கிசுகிசுக்கு குறைவே இருக்காது, லாஸ்லியா, கவின், ஷிவாணி நாராயனன், பாலா போன சீசனில் நிவாஷினி மற்றும் அசல் கோலார் ஆகியோர் இருந்தனர். இந்த சீசனில் மணி - ரவீனா தான் காதல் ஜோடி என்று கிசு கிசுக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் ஐஷூ.

காதல் கசமுசா: நிகழ்ச்சி தொடங்கும் போது இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இருவரின் காதல் எல்லை மீறி வருகிறது. எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐஷூ உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐஷு தன்னுடைய கையில் 'என் எக்ஸ்’ என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். இதை நெட்டிசன்கள் நோட் பண்ணி இணையத்தில் வைரலாக்கி விட்டனர்.
நிக்சன்-ஐஷு முத்தம்: அது மட்டுமில்லாமல் கடந்த வாரம் நிக்சன் மற்றும் ஐஷு ஆகிய இருவரும் கண்ணாடி முன் அமர்ந்து மைக்கை கழட்டி விட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, இருவரும் கண்ணாடி இருப்பதை மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படு பயங்கரமாக வைரலானது.
கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்: மேலும், இந்த சில்மிஷகள் கேமிராவில் தெரியக்கூடாது என்பதற்காக, கேமிரா இல்லாத இடமான ஸ்மோகிங் அறைக்கு சென்று அத்துமீறி வருகின்றனர். நிக்சன் மற்றும் ஐஷு பேசிக்கொண்டு இருக்கும் சத்தத்தை மட்டும் கேட்ட நெட்டிசன்கள் பலர் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
தெருவுல மூஞ்சி காட்ட முடியாது: இது குறித்து பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு, அனைத்து பெற்றோர்களும் அள்ளுல உட்கார்ந்து இருக்காங்க. பாவம் அந்த ஐஷு பெற்றோர்களை நினைச்சா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, இவங்களால தெருவுல மூஞ்சி காட்ட முடியாது.அந்த பொண்ணு ஐஷு இன்னைக்கு காலைல நிக்சனுடன் என்ன வேலை பண்ணுது, fifty shades of greyலாம் ஒரு கேம்மா, எங்க அடி சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கு என்றும் ஐஷுவை வெளுத்து வாங்கியுள்ளார் சுசித்ரா.


Click it and Unblock the Notifications











