கன்ஃபார்ம் ஆயிடுச்சு.. பிக் பாஸ் செல்லும் 7 போட்டியாளர்கள் இரண்டு பேரின் எக்ஸுகள்?
சென்னை: பிக் பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பிக் பாஸ் சீசன்: கடந்த ஜனவரி மாதம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை அஸிமும் இரண்டாம் இடத்தை விக்ரமனும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அக்டோபர் 1ந்தேதி: பிக் பாஸ் 7வது சீசனை இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புது ப்ரோமோ வெளியாகி இருந்தது. பிக் பாஸ் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ம் தேதி தொடங்க இருப்பதால், அடுத்த 100 நாட்களுக்கு கன்டென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது.
போட்டியாளர்கள்: பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன், பப்லு பிரித்விராஜ், தர்ஷா குப்தா, இந்திரஜா ரோபோ சங்கர், மா கா பா ஆனந்த், மெளன ராகம் சீரியலில் நடித்த ரவீனா, வனிதாவின் மகள் ஜோவிகா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் 6 சீசனில் கலந்து கொண்ட ஆயிஷாவின் முன்னாள் காதலரான நடிகர் விஷ்ணு பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறாராம். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க காரணமானவர் பிக் பாஸ் 6 போட்டியாளரான நடிகை ரச்சிதா மகாலட்சுமியாம். ரச்சிதாவும், தினேஷும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டு எக்ஸ்: அண்மையில் கூட மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் அளித்தார் ரச்சிதா. உடனே தினேஷை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது இது பற்றி எல்லாம் தினேஷ் பேசுவார் என பார்வையாளர்கள் நம்புகிறார்கள். ஆயிஷாவின் எக்ஸ் மற்றும் ரச்சித்தாவின் எக்ஸ் என இரண்டு எக்ஸ்கள் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால், இந்த நிகழ்ச்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











