VJ Archana: புதிய கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்.. என்ன கார் தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான வி.ஜே அர்ச்சனா புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

VJ archana Bigg Boss

கடந்த 1997 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை தான் VJ அர்ச்சனா. வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் அறிமுகமான இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2வில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இந்த சீரியலில் இவரின் வில்லத்தனம் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு அவர் மீதான விமர்சனங்களும் அதிகமாக எழுந்தன. அந்த சீரியலைத் தொடர்ந்து, தேன்மொழி பி ஏ, இந்திரா, உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சீரியல் மட்டுமில்லாமல் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

VJ archana Bigg Boss

விஜே அர்ச்சனா: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை அர்ச்சனா போட்டி தொடங்கி 28 நாட்கள் கழித்துதான் உள்ளே சென்றார் என்றாலும் உள்ளே சென்றதுமே தனது விளையாட்டை தொடங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதை முதலில் தவறு என்று சொன்னதே அர்ச்சனா தான். அதே போல மாயாவிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்த இவர், பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார்.

VJ archana Bigg Boss

காதல் கிசுகிசு: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், பெரிய செலப்பிரிட்டியான அர்ச்சனா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண்பிரசாத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக இணையத்தில் ஒரு செய்தி பரவியது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

VJ archana Bigg Boss

புதிய கார்: இந்நிலையில், விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.மாருதி நிறுவனத்தின் கிராண்டு விட்டாரா கார் மாடலையே புதிதாக வாங்கியிருக்கிறார். விஜே அர்ச்சனா வாங்கியிருக்கக் கூடிய இந்த மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா கார் மாடலானது ரூ.13.15 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய கார் வாங்கி இருக்கும் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X