Bigg Boss Anshitha: எல்லாம் முடுஞ்சுதா?.. அர்னவ்வோடு எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்த அன்ஷிதா..

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அன்ஷிதாவும் அர்னவும் மிகவும் கவனிக்கப்பட்ட, பலராலும் விமர்சிக்கப்பட்ட போட்டியாளர்களாக மாறினார்கள். அதற்கு காரணம் சீசன் தொடங்கும்போது காதலர்களாக இருந்த இருவரும், சீசன் முடியும் போது பிரிந்துவிட்டார்கள். இப்படி இருக்கும்போது, அர்னவ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

Anshitha Arnav Bigg Boss

அன்ஷிதாவும் அர்னவும் காதலிக்கிறார்கள் என்ற பேச்சு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் உலா வந்தது. ஆனால் இது எல்லாம் பிக் பாஸ் போட்டியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்ட வரை மட்டும்தான். சீசன் முடியும் போது இவர்களுக்கு இடையிலான உறவும் முடிவுக்கு வந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் பிரேக் அப் நடந்து விட்டதாகவும், அன்ஷிதா தற்போது பிக் பாஸில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளர் வி.ஜே. விஷாலைக் காதலிப்பதாகவும் ரசிகர்கள் கூறினர். இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில், பிக் பாஸ் சீசன் 8 முழுவதுமாக முடிவடைவதற்கு முன், உலா வந்தது.

Anshitha Arnav Bigg Boss

அர்னவுக்கு பதிலடி: இப்படி இருக்கும்போது, பிக் பாஸ் சீசன் 8 இறுதி நாளில், பேசும்போது கூட அர்னவ் பெயரைக் குறிப்பிடாமல், "இந்த சீசனுக்கு வரும்போது பெரும் நம்பிக்கையோடு இருந்தேன். இந்த சீசனின் மூன்றாவது வாரத்தில் இருந்து எனது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னர் நான், ஒருவரிடம் எப்போதும் கெஞ்சிக் கொண்டு, அழுது கொண்டு இருந்தேன். பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியே வந்ததும், நான் அந்த நபரைச் சந்தித்து, திட்ட ஆரம்பித்தேன். இனிமேல் அவர் என்னோட வாழ்க்கையில் இல்லை எனக் கூறி விட்டு வந்துவிட்டேன். அவர் அவருடைய புது காதலியுடன் ஜாலியாக இருக்கின்றார்"எனக் கூறினார்.

Anshitha Arnav Bigg Boss

போஸ்ட் டெலிட்: அன்ஷிதா குறிப்பிட்ட மூன்றாவது வாரத்தில் தான், அர்னவ் போட்டியில் இருந்து வெளியேறினார், அதைத்தான் அன்ஷிதா மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் கூறினர். அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்டிருந்த அர்னவ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார். ஆனால் மற்ற நண்பர்கள் உடன் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களில் அர்னவ் உள்ளார். '

Anshitha Arnav Bigg Boss

எல்லாம் முடிந்தது: அதேபோல் அர்னவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு செய்த ஸ்டோரி இன்னும் அன்ஷிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. அர்னவ்வின் புகைப்படங்களை அன்ஷிதா டெலிட் செய்ததை கேள்விப்பட்ட ரசிகர்கள், அன்ஷிதா மற்றும் அர்னவிற்கு இடையிலான எல்லா உறவும் முடிந்து விட்டது போல் தெரிகிறது. அதனால்தான் அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அர்னவ் புகைப்படங்களை நீக்கிவிட்டார் என பேசி வருகின்றனர்.

Anshitha Arnav Bigg Boss

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X