Bigg Boss: விஷாலுக்கு பிறந்தநாள்.. மகிழ்ச்சியில் அன்ஷிஷா போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்.. ஒரே லவ்வு தான்
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வானார். மூன்றாவது இடத்தை விஷால் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படி இருக்கும்போது, பிக்பாஸ் போட்டியாளர்கள் வி.ஜே. விஷால் மற்றும் அன்ஷிதா காதலிக்கிறார்கள் என்ற பேச்சு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் வி.ஜே. விஷால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 8இல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களில் மூன்று போட்டியாளர்களின் பெயர் கட்டாயம் இருக்கும். அதாவது போட்டியாளர்கள் அர்னவ், அன்ஷிதா மற்றும் வி.ஜே. விஷால் ஆகியோர் தான் அந்த மூன்று பேர். காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக, அர்னவ் மற்றும் அன்ஷிதா காதலிப்பதாக தகவல்கள் உலா வந்தது. அதே நேரத்தில், இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் கடந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கியதால், இவர்கள் இருவரும் லவ் கண்டண்ட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அர்னவ் வீட்டில் இருந்த மூன்று வாரத்திலும், அன்ஷிதாவுடன் மன வருத்தம் ஏற்பட்டது.

மூன்றாவது வாரத்தில் அர்னவ் வெளியேறினார். அர்னவ் வெளியேறும்போது, அன்ஷிதா மிகவும் மனம் உடைந்து அழுது, அவரை வழி அனுப்பினார். அதன் பின்னர் அன்ஷிதா கிட்டத்தட்ட 90 நாட்கள் வீட்டில் போட்டியாளராக இருந்தார். அதற்கிடையில், அன்ஷிதாவுக்கும் விஷாலுக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டதால், இருவரும் வீட்டில் ஒன்றாகவே இருந்தனர்.

காதல்: இதனால் இருவரும் காதலிப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபட்டது. அன்ஷிதா வெளியேறிய பின்னர், போட்டியின் முடிவுகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டிற்கு அர்னவ் மீண்டும் சென்றார். அப்போது விஷாலிடம், என்ன விஷால் லவ் டிராக் எல்லாம் போச்சு போல எனக் கேட்க, அதற்கு விஷால், அப்படி என்றால் கட்டாயம் உங்களை கல்யாண பத்திரிகையோடு வந்து சந்திக்கிறேன் எனக் கூறினார்.

அசின் - விஷ்ணு: இந்த இடம்தான் பிக் பாஸ் சீசன் 8ல் ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த இடம் எனலாம். அப்படி இருக்கும்போது அர்னவ் வீட்டில் இருக்கும் போது, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அன்ஷிதா, அர்னவைப் பார்க்க கூட இல்லை. மாறாக, விஷாலை ஓடிப்போய் கட்டிப்பிடித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அன்ஷிதாவும் விஷாலும் காதலிக்கிறார்கள். அதனால்தான் அன்ஷிதா விஷாலிடம் நெருக்கமாக பழகுகிறார் என கூறப்பட்டது. அன்ஷிதவை விஷால், அசின் என செல்லப் பெயர் வைத்து அழைத்து வந்தார்.
பிறந்த நாள்: இப்படியான நிலையில் அன்ஷிதா, விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக விஷாலுடன் எடுத்த புகைப்படங்கள் மூன்று புகைப்படங்களையும், அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோவும் அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களோடு, " Happy birthday vishhhhh...✨🤍 🧿" என்றும் பதிவிட்டுள்ளார். அன்ஷிதாவின் போஸ்டைப் பார்த்த ரசிகர்கள் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒரு ரசிகர், ஹேப்பி பர்த் டே அசினோட விஷால் என பதிவிட்டுள்ளார். அன்ஷிதாவின் இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











